லோங் பாசியா | |
---|---|
Long Pasia Town | |
சபா | |
ஆள்கூறுகள்: 4°24′28″N 115°43′19″E / 4.40778°N 115.72194°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | உட்பகுதி |
மாவட்டம் | சிபித்தாங் |
நகரம் | லோங் பாசியா |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
லோங் பாசியா (மலாய்: Pekan Long Pasia; ஆங்கிலம்: Long Pasia Town; சீனம்: 长帕西亚) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, சிபித்தாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சுற்றுலா நகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 300 கி.மீ.; (190 மைல்) தொலைவிலும்; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து 1,568 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
லோங் பாசியா கிராமப்புற நகரம், சபாவின் தெற்குப் பகுதியில் உலு பெடாசு (Ulu Padas) எனும் இடத்தில் உள்ளது. உலு பெடாசு பகுதி, சபா மாநிலத்தில் உள்ள சிறப்பான தாவரப் பன்முகத் தன்மை கொண்ட பகுதிகளில் ஒன்றாக அறியப் படுகிறது.
கலாசாரம், வரலாறு மற்றும் இயற்கைப் பாரம்பரியம் நிறைந்துள்ள பகுதியாகவும் லோங் பாசியா கிராமம் அறியப் படுகிறது. அத்துடன் முற்றிலும் தனித்துவமான சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.[1]
லோங் பாசியா கிராமப்புற நகரம், லுன் டாயே (Lun Bawang/Lun Dayeh) பழங்குடியினரின் சொந்த நகரமாகும். மேலும் சுமார் 1,000 லுன் பாவாங் மக்கள் இங்கு வசிக்கின்றனர். மேலும் இவர்கள் அனைவரும் போர்னியோ எவாஞ்சலிகல் தேவாலய (Borneo Evangelical Church) கிறித்தவர்கள் ஆகும்.
இது கோட்டா கினாபாலுவிற்கு தென்மேற்கே சுமார் 300 கிலோமீட்டர்கள் (190 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரத்தில் மலிகான் பீடபூமியில் (Maligan Highlands) உள்ளது.
முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் நெல் நடவு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா. லோங் பாசியா கெரங்காசு பூங்காவிலும் (Long Pa' Sia' Kerangas Park); உலு படாசு (Ulu Padas) ஆற்றைச் சுற்றியுள்ள காடுகளிலும் ஏராளமான ஆர்க்கிட் பூ (Orchid Species) இனங்களுக்கும்; மற்றும் சாடிச் செடி தாவரங்களுக்கும் (Pitcher Plants) பெயர் பெற்றது. போர்னியோவின் உள்ளூர் பறவையான கறுப்பு ஓரியோல் பறவைக்கும் (Black Oriole) தாயகமாக உள்ளது.