லோரியன் தங்கை பௌத்த தொல்லியல் களம் | |
---|---|
லோரியன் தங்கையின் மறுசீரமைக்கப்பட்ட தூபி | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஆப்கானிஸ்தான் |
புவியியல் ஆள்கூறுகள் | 34°32′04″N 71°52′16″E / 34.5344°N 71.8711°E |
சமயம் | பௌத்தம் |
மண்டலம் | காந்தாரம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | கிபி இரண்டாம் நூற்றாண்டு |
நிலை | தூபி சிதிலமைடைந்துள்ளது. |
செயற்பாட்டு நிலை | தொல்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது |
லோரியன் தங்கை (Loriyan Tangai) ஆப்கானிஸ்தான் நாட்டின் பண்டைய காந்தாரப் பகுதியில் அமைந்த பௌத்த தொல்லியல் களம் ஆகும். இத்தொல்லியல் களத்தில் 1896—இல் அலெக்சாண்டர் கட்டி தலைமையில் நடைபெற்ற அகழ்வாய்வுவின் போது, கிபி இரண்டாம் நூற்றாண்டின் கௌதம புத்தரின் பல சிற்பங்களும், தூபிகளும் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. [1]
லோரியன் தங்கை புத்தர் சிலையின் ஒன்றின் மீதிருந்த கல்வெட்டுக் குறிப்பில் 318-ஆம் ஆண்டு எனக்குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு கிபி 143 ஆக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
காந்தாரப் பகுதிகளில் யவனர்கள் எனும் கிரேக்கர்களின் ஆட்சி கிமு 174-இல் துவங்கியது என கணிக்கப்பட்டுள்ளது. எனவே கிரக்க கலைநயத்தில் வடிக்கப்பட்ட இப்புத்தர் சிலை கிபி 143-ஆண்டைச் சேர்ந்தது என வரலாற்றுத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். [2]