ழீன் எபு சுவாங்கு Jean Hebb Swank | |
---|---|
பிறப்பு | மதில்டே ழீனெத்தி எபு |
கல்வி |
|
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | வானியர்பியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1975–2013 |
பணியகம் | நாசா |
அறியப்படுவது | X-கதிர் வானியற்பியல் ஆராய்ச்சி |
ழீன் எபு சுவாங்கு (Jean Hebb Swank) ஓர் அமெரிக்க்க வானியற்பியலாளர் ஆவார். இவர் கருந்துளைகள், நொதுமி விண்மீன்கள் ஆய்வுக்காகப் பெயர்பெற்றவர்.
சுவாங்கு 1961 இல் பிரின் மாவர் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரின் மாவரில் அமைந்த இவரது இரு இயற்பியல் பேராசிரியர்கள் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள். எனவே இவ்விருவரும் சுவாங்கை கலிபோர்னிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டமேற்படிப்பு தொடரும்படி வற்புறுத்தினர். இவர் இயற்பியலில் தன் முனைவர் பட்டத்தை 1967 இல் சுட்டீவே பிரவுட்சுசி வழிகாட்டுதலின்கீழ் பெற்றார்.[1] இவரது முனைவர் பட்ட ஆய்வுரை "நொதுமன்-மின்னன் ஊடாட்ட்த்தில் கதிர்வீச்சுத் திருத்தங்கள்" என்பதாகும்.[2]
இவர் 1966 முதல் 1969 வரை இலாசு ஏஞ்சலீசில் அமைந்த கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகத்தில் உத்விப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து கல்வி கற்பித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு இவர் இல்லினாயிசு சென்று 1969 முதல் 1971 வரை சிகாகோ அரசு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பித்தார்.[1][2]
சுவாங்கும் அவரது கணவரும் 1971 இல் துருக்கியில் உள்ள அங்காரா சென்று நடுவண் கிழக்குத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்களாகச் சேர்ந்தனர்.அங்கே இவர் உயர் ஆற்றல் வானியற்பியலாளராகிய, அப்போது இயற்பியல் துறைத்தலைவராக இருந்த ஆக்கி போரான் ஓகல்மனைச் சந்தித்தார். அப்போது ஓகல்மன் கோடார்டு விண்வெளி பரப்பு மையத்தில் காம்மாக் கதிர் வானியலில் ஈடுபட்டிருந்தார். அவரிடம் சுவாங்கு 1975 இல் ஏவப்படவிருந்த எட்டாம் சூரிய வட்டணை வான்காணகத்துக்காக உருவாக்கிய செஉமுறைகளைக் கற்றுக்கொண்டார். அமெரிக்கா திரும்பியதும், சுவாங்கு கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் முதுமுனைவர் ஆராய்ச்சிக்கு விண்ணப்பித்து அதற்கான ஆய்வுநல்கையைப் பெற்றார்.[1]
சுவாங்கின் நாசாவுடனான முதல் தொடர்பு கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தின் X-கதிர் வானியற்பியல் கிளையில் அமெரிக்கத் தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் தேசிய அறிவியல் கல்விக்கழகச் சார்பில் அக ஆராய்ச்சி இணையராக பணிபுரிந்தபோது ஏற்பட்டது.[2]
இவர் உரோசி X-கதிர்_நேர அமைவு தேட்டக்கலத்தின் விகிதமுறை எண்ணி அணியின் முதன்மை ஆய்வாளரும் X-கதிர்_நேர அமைவு தேட்டக்கலத் திட்ட அறிவியலாளரும் ஆவார்.[3] இக்கலம் 1995 இல் ஏவப்பட்டது. இவருக்கு 1999இல் புரூனோ உரோசி பரிசும் ஏல் பிராதித் பரிசும் வழங்கப்பட்டன. இவை X-கதிர்_நேர அமைவு தேட்டக்கலத் திட்ட முதன்மைப் பங்கேற்புக்காகவும் அதனால் விளைந்த உயர்நேரப் பிரிதிறன் சார்ந்த செறிந்த வானியற்பியல் வான்பொருள்களின் கண்டுபிடிப்புகளுக்கான நோக்கீடுகளுக்காகவும் வழங்கப்பட்டன.[4]
சுவாங்கு நாசாவின் ஈர்ப்பும் அறுதிக் காந்தவிசையும் காணும் சிறுதேட்டக்கலத் திட்ட்த்தின் (ஜெம்சுத் திட்டம்) முதன்மை ஆய்வாளராக அமர்த்தப்பட்டார்.[5] ஆனால் இந்த ஜெம்சுத் திட்டப் பாதீடு 20 முதல்30% கூடுதலாக அமைந்தமையால் 2012 இல் தள்ளுபடி செய்யப்பட்டது.[6]
கோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரிந்தபோது, சுவாங்கு தனது ஆய்வை கருந்துளைகளும் நொதுமி விண்மீன்களும் வெளியிடும் X-கதிர் உமிழ்விலேயே குவித்தார்.[1] இவர்1993 இல் அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[7] இவர் நாசாவில் பணிபுரிந்த தன் வாழ்நாளில் 300 க்கும் மேலான அறிவியல் கட்டுரைகளை பல அறிவியல் இதழ்களிலும் நாசா வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார்.[8] இவருக்கு 2013 ஜூனில் நாசா தனித்தகவு சேவை பதக்கம் வழங்கப்பட்டது.[9]
சுவாங்கு 2013 இல் ஓய்வு பெற்றார். கோடார்டு விண்வெளி பரப்பு மையம் இவரது வாழ்க்கைக் குறிப்பில் இவரைத் தகைமை அறிவியலாளராகப் பட்டியலிட்டுள்ளது.[2]
இவர் மேரிலாந்து பல்கலைக்கழக்க் கோடை ஆராய்ச்சி நிகழ்ச்சியில் பங்கேற்ரபோது அங்கே உலோவல் ஜேம்சு சுவாங்கு எனும் இயற்பியலாளரைச் சந்தித்துள்ளார். ஜேம்சு சுவாங்கு இல்லினாயிசில் உள்ள தேசிய சுழன்முடுக்கி ஆய்வகத்தில் வேலையில் சேர்ந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.[1]