வி. எஸ். ராமமூர்த்தி | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 ஏப்ரல் 1942 சென்னை மாகாணம், இந்தியா |
பணி | அணு இயற்பியலாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1963 முதல் |
விருதுகள் | பத்ம பூசண் |
வலங்கைமான் சுப்பிரமணியன் ராமமூர்த்தி என்கிற வி. எஸ். ராமமூர்த்தி (V. S. Ramamurthy, , இந்திய அணுசக்தி இயற்பியலாளரும், பெங்களூருவிலுள்ள மேம்பட்ட ஆய்வுகள் நடத்திய நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் அமைப்பின் முன்னாள் இயக்குநரும்,பேராசிரியரும் ஆவார்.[1][2] இவர் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆவார். போக்ரான் முதல் இந்திய அணுசக்தி பரிசோதனையின் வடிவமைப்பாளராக 18 மே 1974 இல் உறுப்பினராக பணியாற்றினார்.[3] 2005 ஆம் ஆண்டில், இந்திய அரசு மூன்றாவது மிகப்பெரிய இந்திய குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது.[4]
ராமமூர்த்தி, ஏப்ரல் 2, 1942 அன்று சென்னை மாகாணத்தில் பிறந்தார். இப்போது அது, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு எனப்படுகிறது. இவர் தம் இளமைக்கால கல்வியை தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் கற்றார். ராமமூர்த்தி இயற்பியலில், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார். மற்றும் 1963 இல் மேம்பட்ட பயிற்சிக்காக. டிராம்பேயிலுள்ள அணு சக்தி அமைத்தல் பயிற்சி பள்ளியில் சேர்ந்தார், , (தற்போது பாபா அணு ஆராய்ச்சி மையம் எனப்படுகிறது). இவர் 1964 முதல் 1979 வரை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றினார். இவர் 1989 ஆம் ஆண்டு வரை மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து அணு ஆராய்ச்சியில் ஆய்வியல் பட்டம் (பி.ஹெச். டி.) பெற்றார்.[3]
1989 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை புவனேஸ்வரிலுள்ள இயற்பியல் நிறுவனத்தின் இயக்குநராக பதவியில் இருந்தார்.[5] 1995 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் செயலாளராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் 2006 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அதன்பிறகு, அவர் பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் இயக்குநராக பணிபுரிவதற்கு முன்பாக, 2009 வரை புது தில்லி பல்கலைக்கழகத்தில், ஓமி பாபா தலைவராக இருந்தார். 2014 இல் அவர், ஓய்வு பெற்றபின், இயற்பியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியராக இருந்தார்.[2] அவர் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டுக் குழுவில் தலைவர்[3] மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (ஐ.ஏ.இ.ஏ) அணுசக்தி பயன்பாடுகளில் பங்கேற்று ஆலோசனைக் குழுவைத் தலைமை தாங்கினார்.[6]
ராமமூர்த்தி இந்திய தேசிய அறிவியல் கழகத்தில் (1987) தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக பல ஆண்டுகளாக பணியாற்றினார். இவர், இந்திய அகாடமி ஆஃப் சயின்ஸில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் (1991) [சான்று தேவை] தேசிய அறிவியல் அகாதமி, இந்தியா மற்றும் இந்திய தேசிய அகாடமி ஆஃப் இன்ஜினியரிங் ஆகியவற்றிலும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உலக அகாதமி அறிவியல் அமைப்பில், ஒரு சக உறுப்பினராகவும், மற்றும் இயற்கை அறிவியல் ரஷியன் அகாதமியில் ஒரு வெளிநாட்டு உறுப்பினராகவும் இருந்தார். 2005 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் எனப்படும் மூன்றாவது உயர்ந்த இந்திய குடிமகன் விருது அவருக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.
அணுக்கருப் பிளவு சம்பந்தமாக பல கோட்பாடுகளையும் சோதனை வழியிலும் கண்டுபிடித்தவர் அவர், 1995-2006 போது, பேராசிரியர் ராமமூர்த்தி இந்திய அரசு செயலர் பதவியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் (DST), புது தில்லயில் முழுமையாக இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்காக ஈடுபட்டிருந்தார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)