வ. ரா. கனோல்கர் | |
---|---|
பிறப்பு | 13 ஏப்ரல் 1895 |
இறப்பு | 29 அக்டோபர் 1978 | (அகவை 83)
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | நோயியல், புற்றுநோய் |
கல்வி கற்ற இடங்கள் | இலண்டன் பல்கலைக்கழகம் |
விருதுகள் | பத்ம பூசண் (1954) |
வசந்த் ராம்ஜி கனோல்கர் (Vasant Ramji Khanolkar) (13 ஏப்ரல் 1895 – அக்டோபர் 29 1978) வி. ஆர். கனோல்கர் என்றும் சிறப்பாக அறியப்படும் இவர் ஓர் இந்திய நோயியல் நிபுணராவார்.[1]
புற்றுநோய் பற்றிய புரிதல், குருதி வகைகள், தொழுநோய் ஆகியவற்றிக்கு இவர் பெரும் பங்களிப்புகளைச் செய்தார். இவர் பெரும்பாலும் "இந்தியாவில் நோயியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். [2]
இவர், ஏப்ரல் 13, 1895 அன்று கோமந்தக் மராத்தா சமாஜ் குடும்பத்தில் பிறந்தார். இவர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றா. மேலும்,1923 இல் நோயியலில் மருத்துவத்தில் முதுகலைப் படித்து, கிராண்ட்ஸ் மெடிக்கல் மற்றும் சேத் ஜி.எஸ் மருத்துவக் கல்லூரிகளில் நோயியல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
டாடா நினைவு மருத்துவமனையுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்த இவர் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகவும் பணியாற்றினார். இந்திய அரசு இவரை தேசிய மருத்துவ ஆராய்ச்சி பேராசிரியராக நியமித்தது. இதில் பத்தண்டுகள் பணியாற்றினார். இவர் இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை ஒழுங்கமைக்க உதவினார். மேலும், அதன் தொடக்கத்திலிருந்து 1973 வரை இயக்குநராக பணியாற்றினார்.
இந்திய நோயியல் நிபுணர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தார். இவர், புற்றுநோய் மற்றும் தொழுநோய் பற்றிய 3 புத்தகங்களையும் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.
மனிதநேயத்திற்கான சிறப்பான சேவைக்காக 1955ஆம் ஆண்டில் பத்ம பூஷனை விருதினை இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார்.[3] மேலும், பத்மசிறீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
இவர் அக்டோபர் 29, 1978 இல் இறந்தார். இவருக்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தனர். அகாதமியின் முதல் தலைவராக இவர் இருந்ததன் நினைவாக டாக்டர் வி. ஆர். கானோல்கர் சொற்பொழிவு 1987 ஆம் ஆண்டு முதல் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியால் நிறுவப்பட்டது.[4]