வகுளாபரணம்

வகுளாபரணம் கருநாடக இசையின் 14வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 14வது மேளத்திற்கு வாடிவஸந்தபைரவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

[தொகு]
வகுளாபரணம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி131 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம13 ரி1
  • அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது இராகம்.
  • இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

[தொகு]
  • மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து தாரஸ்தாயி மத்திமம் வரை சஞ்சாரம் செய்வது இந்த இராகத்திற்கு இனிமையைக் கொடுக்கும்.
  • இந்த இராகத்தில் வரும் அந்தர காந்தாரமும், கைசிகி நிஷாதமும் இவ்விராகத்தின் இரஞ்சகத்தை வெளிப்படுத்தும்.
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் நாமநாராயணி (50) ஆகும்.
  • இதன் ரி, ம, நி முறையே கிரக பேதத்தின் வழியாக கோசலம் (71), கீரவாணி (21), ஹேமவதி (58) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள் [1]

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி கொனியாடி கர்ப்பபுரிவாசர் ஆதி
கிருதி ஏராமுனி தியாகராஜர் திரிபுடை
கிருதி நிலையான பேரின்பமே அம்புஜம் கிருஷ்ணா மிஸ்ர சாபு
கிருதி கெட்டுப்போகாத முத்துத் தாண்டவர் ஆதி
கிருதி நம்பினேன் ஐயா கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி கொனியாடி கர்ப்பபுரிவாசர் ஆதி
கிருதி ஏழைப் பங்காளா வேதநாயகம் பிள்ளை ஆதி
கிருதி ஜாலம் செய்வதேதோ வேதநாயகம் பிள்ளை ரூபகம்

ஜன்ய இராகங்கள்

[தொகு]

வகுளாபரணத்தின் ஜன்ய இராகங்கள் இவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.