வங்காள சாட்டைத் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | பாலிபீடேட்சு
|
இனம்: | பா. டேனியாடசு
|
இருசொற் பெயரீடு | |
பாலிபீடேட்சு டேனியாடசு பெளலஞ்சர், 1906 | |
வேறு பெயர்கள் [2] | |
இராக்கோபோரசு டேனியாடசு பெளலஞ்சர், 1906 |
பாலிபீடேட்சு டேனியாடசு (Polypedates taeniatus) என்பது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளை சிற்றினம் ஆகும். இது வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வங்காளப் பகுதியிலும், அசாம் மற்றும் தெற்கு நேபாளத்திலும் காணப்படுகிறது. இது வங்காள சாட்டைத் தவளை, வங்காள சாட்டை மரத் தவளை, தேராய் மரத் தவளை என்றும் அழைக்கப்படுகிறது .
இந்த சிற்றினத்தின் இயற்கை வாழிடம் வெப்பமண்டல காடுகள் மற்றும் கடல் மட்டத்திற்கு மேல் 500 m (1,600 அடி) உயரத்தில் உள்ள புதர்கள் ஆகும். இது மரங்களில் வகை சிற்றினமாகும். முட்டைகள் சிறிய குளங்களுக்கு மேல் உள்ள கிளைகளில் இடப்படுகின்றன. குஞ்சு பொரித்ததும், தலைப்பிரட்டைகள் குளங்களில் உள்ள நீரில் விழுந்து வாழ்க்கைச் சுழற்சியினை நிறைவு செய்கின்றன. இது பொதுவான சிற்றினம் என்ற போதிலும் காடுகளை அழிப்பு இதன் வாழ்விட இழப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இது இந்தியாவில் உள்ள ஒராங் தேசிய பூங்காவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[1]