வங்காளதேச அரசு (Bengali: বাংলাদেশ সরকার), வங்காளதேச நாட்டை ஆளும் அமைப்பாகும். இதன் தலைவராக வங்காளதேசப் பிரதமர் இருப்பார். இவர் ஏனைய அமைச்சர்களை தேர்ந்தெடுப்பார். அரசின் உயர்மட்ட ஆலோசக அமைப்பான கேபினெட்டில் அனைத்து அமைச்சர்களும் இருப்பர். தற்போதைய வங்காளதேசப் பிரதமராக சேக் அசீனா உள்ளார். இவர் அவாமி லீக் கட்சியின் தலைவர். இவரது கட்சிக் கூட்டணி 299 இடங்களில் 230 பாராளுமன்றத் தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.[1]
நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருப்பார். இந்த பதவி அலங்காரப் பதவியாகவே இருக்கும். பிரதமருக்கு அதிக அதிகாரங்கள் இருக்கும். குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவார். ஆட்சி முடியும் தருவாயில் தேர்தல் ஆணையரிடம் அதிகாரங்கள் வழங்கப்படும். தேர்தல் முடிந்த பின், தேர்ந்தெடுக்கப்பட்டோரிடம் ஆட்சி அதிகாரம் வழங்கப்படும்.[2]
300 உறுப்பினர்களைக் கொண்டது சட்டமன்றம். அனைவரும் பொது வாக்குரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். 18 வயது நிரம்பிய யாவரும் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவர்.
வங்காளதேசத்தின் நீதித்துறையில் உயர்மட்ட அதிகாரம் கொண்டது உச்ச நீதிமன்றம் ஆகும்.
ஆட்சி முறைக்காக உள்ளூர் அளவில், வங்காளதேசம் மாவட்டங்களாகவும், வட்டங்களாகவும், ஊராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மக்களின் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பதவியேற்பர்.