வங்காளதேசத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy in Bangladesh) வளங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படும் செயல்முறை தொடர்பான கருத்துகளை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. தற்போது வங்கதேசத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களாக உயிரிவளி, நீர்மின் ஆற்றல், சூரிய மின் ஆற்றல் மற்றும் காற்று ஆகியவை உள்ளன.[1][2]
வங்காளத்தின் கடலோரப் பகுதிகளில் சூரிய ஒளி பிரகாசிக்கும் நேரம் 3 மணி நேரம் முதல் 11 மணி நேரம் வரையிலும் வேறுபடுகிறது என நீண்ட கால சராசரி சூரிய ஒளி பிரகாசிப்புக் கணக்கீட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன[3]. இதேபோல வங்காள தேசம் ஒரு நாளைக்கு பெறுகின்ற வெப்ப ஆற்றலும் 3.8 கிலோவாட் மணி/மீட்டர்2/நாள் என்ற அளவு முதல் 6.4 கிலோவாட் மணி/மீட்டர்2/நாள் என்ற அளவுக்கு வேறுபட்டு சராசரியாக ஒரு நாளைக்கு 5 கிலோவாட் மணி/மீட்டர்2/நாள் என்ற வெப்ப ஆற்றலைப் பெறுகிறது. வங்க தேசத்தில் சூரிய ஆற்றல் மற்றும் ஒளி மின்னழுத்த ஆற்றல் மூலங்களில் இருந்து மின் உற்பத்தி செய்வதற்கு இயலும் என்பதை இத்தரவுகள் உணர்த்துகின்றன.[4]
வங்கதேசத்தின் மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் மக்கள் மின்வசதியின்றி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்காக, அவர்கள் வீடுகளும் கம்பிவழியின்றி மின் இணைப்பு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் வீடுகளில் சூரிய ஆற்றல் என்ற ஒரு திட்டத்தை வங்க அரசாங்கம் அறிமுகப்படுத்தியது[5]. 2014 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இத்திட்டம் 3 மில்லியன் வீடுகளுக்கு விரிவடைந்ததாக அறியப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் குறைந்தது ஆண்டுக்கு 50000 சூரிய ஒளி ஆற்றல் திட்ட அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன. வீடுகளில் சூரிய ஆற்றல் திட்டம் உலகத்திலேயே மிகவிரைவான வளர்சியை வங்காள தேசம் எட்டியுள்ளது என்று உலகவங்கி குறிப்பிட்டுள்ளது"[6].
2021 ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளிலும், வீடுகளில் சூரிய ஆற்றல் திட்டத்தின்கீழ் மின்சாரம் வழங்கவேண்டும் என்ற முனைப்பில் வங்காள தேச அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டிற்குள் 6 மில்லியன் வீடுகளில் இவ்வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.[7]
மார்ச்சு முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றின் வேகம் 3 முதல் 4.5 மீ/வி ஆகவும் மற்ற மாதங்களில் இது 1.7 முதல் 2.3 மீ/வி ஆகவும் குறிப்பாகத் தீவுகளிலும் வங்கதேசத்தின் தெற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும் வீசுவதாக நீண்டகால காற்றோட்டக் கண்க்கீட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன[8] . எனவே தீவுகளிலும் கடற்கரை ஓரங்களிலும் காற்றாலைகள் அமைப்பதற்கும் மின்மயமாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கோடைக் காலத்திலும் மார்ச்சு முதல் அக்டோபர் வரையிலான பருவ காலங்களிலும் இப்பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் தோன்றி காற்றின் வேகம் 200 முதல் 300 கிலோமீட்டர்/ மணி என்ற வேகத்தில் காணப்படலாம். எனவே திட்டத்தில் பயன்படுத்தப்படும் காற்றுச் சுழலிகள் இவ்வே கத்திற்கு ஈடுகொடுத்து தாங்கும் வலிமையுடன் அமைக்கப்பட வேண்டும்.[9]
கடல் நீர் வரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி மின்னாற்றல் தயாரிப்பது ஓத ஆற்றல் ஆகும். வங்கதேசத்தின் சிட்டகாங் பிரிவில் இவ்வேற்ற இறக்கங்கள் பருவநிலைக்கு ஏற்ப மாறுபடும் அரை நாள் இயக்க வகை மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. தென்மேற்கு பருவகால காலங்களில் இப்பகுதியில் ஓதங்கள் அதிகபட்சமாக இருக்கின்றன. 1984 இல் வங்காள தேச பொறியியல் பல்கலைக்கழகம், கடலோரப் பகுதிகளில் ஓத ஆற்றலைப் பயன்படுத்தும் சாத்தியங்களை முயற்சித்தது. குறிப்பாக காக்சு பசார் நகர், மகேசுகாலி தீவு மற்றும் குதுப்தியா பகுதிகளில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சராசரி அலை வீச்சு 4 முதல் 5 மீட்டர் உயரமும் வசந்தகாலத்தில் இது 6 மீட்டர்களையும் தாண்டுகிறது[10] . காக்சு பசார் நகர், மகேசுகாலி தீவு மற்றும் குதுப்தியா மற்றும் சில நிரந்தர ஆழமற்ற பகுதிகளில் நீர் உந்தும் அமைப்புகளை இரு நோக்குத் திட்டத்தில் அமைக்க பொருத்தமான தளங்கள் காண்ப்படுவதை பல்வேறு வகையான கணக்கீடுகளும் தெரிவிக்கின்றன[11][12]
காற்றினால் ஏற்படும் அலைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய வங்க தேசத்தில் பொருத்தமான காலநிலைகள் இருக்கின்றன. மார்ச்சு மாதத்தின் பின்பகுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் முதல் வரை தென்மேற்கு காற்றினால் வங்கக்கடலில் தோன்றும் அலைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும்[13]. அலைகளின் அதிகபட்ச உயரம் 2 மீட்டர் முதல் 2.4 மீட்டர் வரை உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 0.5 மீட்டர் உயரமுள்ள அலைகள் 3 முதல் 4 வினாடிகள் 2 மீட்டர் உயரமுள்ள அலைகள் 6 வினாடிகள் இடைவெளியும் அலை இடைவெளிகளைக் கொண்டிருக்கின்றன என்றும் அறியப்படுகிறது.[3]
பெருநகரங்களில் சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்த திடக்கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை அரசாங்கத்தின் திடக்கழிவு மேலாண்மை துறை முயற்சித்து வருகிறது[14][15] .
வங்க தேசத்தில் மின் உற்பத்திக்காக இரண்டு வகையான உயிர் வளித்திட்டங்கள் செயற் படுத்தப்படுகின்றன. மிதக்கும் குவிமாட முறை , நிலையான குவிமாட முறை என்பன இவ்விரு முறைகளாகும். இவைதவிர பை வகை முறைகளும் அரிதாக இங்கு பயன்படுத்தப்படுகின்றன.[16][17][18]
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)