வசந்தத்தில் ஓர் நாள் | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | சீ. இரங்கராஜன் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சிறீபிரியா |
ஒளிப்பதிவு | விஸ்வநாத் ராஜ் |
கலையகம் | வீசஸ் ஆர்ட் |
வெளியீடு | 7 மே 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வசந்தத்தில் ஓர் நாள் (Vasandhathil Or Naal) என்பது 1982 ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்பபடமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கிய இப்படத்தை எஸ். ரங்கராஜன் தயாரித்தார். இதில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்தனர்.[1] இது 1975 ஆண்டு வெளியான இந்தி படமான மௌசம் படத்தின் மறுஆக்கமாகும். இப்படம் 1982 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் வெளியானது.
ராஜசேகரன் கிராமத்திற்கு செல்லும்போது அங்கு ராஜி என்ற பெண்ணைச் சந்தித்திகிறார். இருவரும் காதலிக்கின்றானர். ஊருக்குச் சென்று தன் பெற்றோரின் ஒப்புதலுடன், அவளை திருமணம் செய்துகொள்வதாக அவளுக்கு உறுதியளித்துச் செல்கிறார். இருப்பினும், சூழ்நிலையால் அவரால் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல்போகிறது. ஆண்டுகள் கடந்து செல்கின்றன, அவள் வேறொருவரை மணந்துகொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்வாள் என்ற நம்பிக்கையுடன் ராஜசேகரின் இருக்கிறார். ஆனால் தற்செயலாக அவளை ஒரு விபச்சார விடுதியில் சந்திக்கும்போது அவரது நம்பிக்கை உடைகிறது.
அங்கு பார்த்த பெண் ராஜி அல்ல, ராஜியின் மகள் நீலா என்று தெரிகிறது. அவர் அவளை விபச்சார விடுதியில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளை சீர்திருத்த முயற்சிக்கிறார். ராஜி ஒரு ஊனமுற்ற முதியவரை திருமணம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்பட்டாள், அவளது மாமனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். நீலா பிறந்த பிறகு பைத்தியம் பிடித்து இறக்கிறாள். பின்னர் நீலா ஒரு விபச்சார விடுதிக்கு விற்கப்பட்டாள் என்பது தெரியவருகிறது. ராஜசேகரன் குற்ற உணர்ச்சியுடன் அவளை மீட்க பாடுபடுகிறார்.
நீலா இதை காதல் என்று தவறாக நினைக்கிறாள். இதன் பிறகு முழு உண்மையையும் ராஜசேகரனை சொல்கிறார். இதனால் ராஜசேகரனை வெறுத்து நீலா தப்பி ஓடுகிறாள். அவள் ராஜசேகரனைப் புரிந்து கொண்டாளா. அவள் வாழ்வு என்ன ஆனது என்பதே மீதிக் கதையாகும்.
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "பச்சை வண்ண" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:10 | |||||||
2. | "போதும் தெய்வம் என்னை" | டி. எம். சௌந்தரராஜன் | 4:18 | |||||||
3. | "கோலாலம்பூர்" | எல். ஆர். ஈசுவரி | 4:31 | |||||||
4. | "வேண்டும் வேண்டும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:33 | |||||||
மொத்த நீளம்: |
17:32 |
வசந்தத்தில் ஓர் நாள் 1982 மே 7 அன்று வெளியானது.[3] மிட் டேயின் எஸ். சிவக்குமார் ஸ்ரீபிரியாவின் "குறிப்பிடத்தக்க நடிப்புக்காக" பாராட்டினார். கல்கியின் மஞ்சுளா ரமேஷ் இந்த கனமற்ற கதைக்களத்தில் சிவாஜியும், ஸ்ரீப்ரியாவும் வீணடிக்கப்பட்டார்கள் எனக் கருதினார், ஆனால் இசையையும், பாடல்களையும் பாராட்டினர்.[4] நியூ சண்டே டைம்சுக்கு எழுதிய எஸ். ஜெயகிருஷ்ணன், சிவாஜி கணேசன், ஸ்ரீப்ரியா ஆகியோரின் நடிப்பைப் பாராட்டினார். ஒளிப்பதிவு போன்ற தொழில்நுட்ப அம்சங்களைப் பாராட்டும் அதே வேளையில், "திரைப்படத்தை அதன் ஆரம்ப கட்டங்களில் தடுமாறச் செய்ததற்காக" இயக்குநரை விமர்சித்தார்.