வசந்தபாலன் | |
---|---|
பிறப்பு | சூலை 12, 1966 விருதுநகர், தமிழ் நாடு, இந்தியா |
தொழில் | திரைப்பட இயக்குநர் திரைக்கதை எழுத்தாளர் |
நடிப்புக் காலம் | 2003 - இன்று வரை |
வசந்தபாலன் (Vasanthabalan) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[1] அங்காடித் தெரு, வெயில், காவியத் தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் இயக்கிய வெயில் திரைப்படம் கேன்சு திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[2]
வசந்தபாலன் படத்தொகுப்பு உதவியாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் எசு.சங்கர் இயக்கிய அறிமுகப்படமான ஜென்டில்மேன் (1993) படத்தில் உதவி இயக்குநரானார். காதலன் (1994), இந்தியன் (1996) மற்றும் ஜீன்ஸ் (1998) ஆகிய மூன்று படங்களில் சங்கரின் கீழ் தொடர்ந்து பணியாற்றினார்.
பின்னர் இவர் ஆல்பம் (2002) என்ற படத்தின் மூலம் ஒரு இயக்குநராக மாறினார்.[3]
சங்கரின் எசு பிக்சர்சு நிறுவனம் தயாரித்த இவரது இரண்டாவது படமான வெயில் (2006) விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படம் 2007 ஆம் ஆண்டு கேன்சு திரைப்பட விழாவில் இந்தியப் பிரதிநிதியாகக் காட்டப்பட்டது.[2] இவரது அடுத்த வெளியீடான அங்காடித் தெரு (2010), தமிழ்நாட்டின் சென்னை நகரில் உள்ள புகழ்பெற்ற ரங்கநாதன் தெருவில் நிகழும் ஒரு காதல் கதையை காட்சிப்படுத்தியது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான அகாடமி விருதுக்காக இந்தியாவின் சார்பாக சமர்ப்பிப்புக்காகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது.[4] 2012 ஆம் ஆண்டில், 18 ஆம் நூற்றாண்டின் தென் தமிழக மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காவல் கோட்டம் நாவலை அடிப்படையாகக் கொண்ட அரவான் என்ற திரைப்படத்தை வசந்தபாலன் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, இவர் காவிய தலைவன் (2014) என்ற திரைப்படத்தை உருவாக்கினார், இது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.[5]
ஜி.வி. பிரகாசு குமார் மற்றும் அபர்நதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ஜெயில் (2021) என்ற இவர் இயக்கிய திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.[6] பின்னர் இவர் அர்ச்சூன் தாசு மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த அநீதி என்ற உளவியல் திரைப்படத்தை இயக்கினார்.[7] அநீதி என்பது சுரண்டல், இரக்கம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள அனைத்தையும் ஈர்க்கக்கூடிய ஒரு திரைப்படமாகும். 2024 ஆம் ஆண்டில் அரசியல் தொடர்பாக இவர் இயக்கிய தொலைக்காட்சித் தொடரான தலைமை செயலகத்திற்கு சராசரி மதிப்புரைகள் வெளியிடப்பட்டன.[8]
ஆண்டு | படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2003 | ஆல்பம்[3] | தமிழ் | |
2006 | வெயில் | தமிழ் | சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது |
2010 | அங்காடித் தெரு[4] | தமிழ் | |
2011 | அரவான் | தமிழ் | |
2014 | "காவியத் தலைவன்"[9] | தமிழ் | |
2021 | "ஜெயில்" | தமிழ் | |
2023 | "அநீதி | தமிழ் |