வசுதைவ குடும்பகம் (சமசுகிருதம்: वसुधृव कुटुम्बकम्) என்பது இந்து சமய நூல்களில் ஒன்றான மகா உபநிடத்தில் காணப்படும் சமஸ்கிருத வசனமாகும். இந்த வசனத்தின் பொருள் "உலகம் ஒரே குடும்பம் ("The World Is One Family") என்பதாகும்.[2][3][4] என்பதாகும். குறுகிய மனம் இது என்னுடையது, அது அவருடையது என்று நினைக்கிறது; ஆனால் தாராள மனது உலகமே எனது வீடு என்று நினைக்கிறது.
மகா உபநிடத்தின் ஆறாவது அத்தியாயம், மந்திரம் எண் 71-73களில் (VI.71-73) வசுதைவ குடும்பகம் எனும் வசனம் காணப்படுகிறது.[5][6] இது போன்ற மந்திரம் ரிக்வேதத்திலும் காணப்படுகிறது. இது இந்திய சமுதாயத்தில் மிக முக்கியமான தார்மீக மதிப்பாக கருதப்படுகிறது. மகா உபநிடதத்தின் வசுதைவ குடும்பகம் எனும் வசனம் இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தின் நுழைவு மண்டப நுழைவாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது.[1]
அயம் நிஜঃ பரோ வேதி গணநா லঘுசேதஸம்। உதாரசரிதாநாம் து வஸுதைவ குடும்பகம்
வசுதைவ குடும்பகம் எனும் வசனம் பாகவத புராணத்தில் அதிகம் கையாளப்பட்டுள்ளது. வசுதைவ குடும்பகம் எனும் வசனம் மகா உபநிடதத்தில் "உயர்ந்த வேதாந்த சிந்தனை" என்று அழைக்கப்படுகிறது. காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதியின்[7] முன்னாள் இயக்குநர் என். ராதாகிருஷ்ணன், காந்திய தத்துவம், முழுமையான வளர்ச்சி மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை மற்றும் அகிம்சையை ஒரு நம்பிக்கை மற்றும் மூலோபாயமாக உட்பொதிக்கும் வன்முறையற்ற மோதல் தீர்வு, வசுதைவ குடும்பகம் என்ற பண்டைய இந்தியக் கருத்தாக்கத்தின் விரிவாக்கம் என்று நம்புகிறார்.[8]
வாழும் கலை நிறுவனம் நடத்திய உலகப் பண்பாட்டு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசும் போது, வசுதைவ குடும்பகம் எனும் வசனத்தைப் பயன்படுத்தினார். மேலும் "இந்திய கலாச்சாரம் மிகவும் வளமானது, நம் ஒவ்வொருவரிடமும் சிறந்த மதிப்புகள் புகுத்தப்பட்டுள்ளது. அஹம் பிரம்மாஸ்மி முதல் வசுதைவ குடும்பகம் வரை நாம் உபநிடதங்களிலிருந்து அறிந்து கொள்கிறோம்".[8][9]ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் தனது தத்துவங்களில் ஒன்றாக வசுதைவ குடும்பகம் எனும் தத்துவத்தை கொண்டுள்ளது.
2023ம் ஆண்டில் இந்தியா தலைமையில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் சின்னத்தில் குறிக்கோளுரையாக “வசுதைவ குடும்பகம்” அல்லது “ஒரு பூமி-ஒரே குடும்பம்-ஒரு எதிர்காலம்” என்ற வசனம் தேர்வு செய்யப்பட்டது.[10]ஐக்கிய நாடுகள் அவையின் அதிகாரப்பூர்வ மொழியாக சமசுகிருதம் இல்லாதபடியால் சீனா இதனை எதிர்த்தது.[11][12]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)