வசுந்தரா கொம்காலி | |
---|---|
![]() பத்மஸ்ரீ பெறும் வசுந்தரா. | |
பிறப்பு | ஜம்சேத்பூர், சார்க்கண்ட், இந்தியா | 23 மே 1931
இறப்பு | 29 சூலை 2015 தேவாஸ், மத்தியப் பிரதேசம், இந்தியா | (அகவை 84)
கல்லறை | தேவாஸ் 22°57′48.6″N 76°02′44.8″E / 22.963500°N 76.045778°E |
மற்ற பெயர்கள் | வசுந்தரா சிறீகண்டே |
பணி | பாரம்பரிய பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1943–2015 |
அறியப்படுவது | இந்துஸ்தானி வாய்ப்பாட்டு |
வாழ்க்கைத் துணை | குமார் கந்தர்வா |
பிள்ளைகள் | கலாபினி கொம்காலி |
விருதுகள் | பத்மசிறீ சங்கீத நாடக அகாதமி விருது |
வசுந்தரா கொம்காலி (Vasundhara Komkali) (1931–2015), வசுந்தரா தை என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் ஓர் இந்திய பாரம்பரிய இசைக்கலைஞரும் மற்றும் இந்துஸ்தானி இசையின் பழைய கியால் பாரம்பரியமான குவாலியர் கரானாவின் முன்னணி நிபுணராகளில் ஒருவராக இருந்தார். இவர் புகழ்பெற்ற இசைக்கலைஞர் குமார் கந்தர்வாவின் மனைவியாவார். மேலும், இவர் சங்கீத நாடக அகாதமி விருதையும் பெற்றுள்ளார். [1] இந்திய பாரம்பரிய இசையில் இவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு இந்தியக் குடிமகனின் நான்காவது கௌரவமான பத்மசிறீ விருதினை வழங்கி கௌரவித்தது. [2] இவர் பாரம்பரிய ராகங்களை நாட்டுப்புற மக்களுடன் சுதந்திரமாகக் கலந்தார். அவரது வரிகள் மதத்தையும் கடவுளையும் கேள்வி எழுப்பின. [3]
வசுந்தரா கொம்காலி, என்கிற வசுந்தரா சிறீகண்டே, 1931 மே 23 அன்று இந்திய மாநிலமான சார்க்கண்டின் மிகப்பெரிய நகரமான ஜம்சேத்பூரில் ஒரு இசையை விரும்பும் குடும்பத்தில் பிறந்தார். [4] இவரது ஆரம்ப ஆண்டுகள் கொல்கத்தாவில் இருந்தன. தனக்கு 12 வயது இருக்கும்போது இவர் குமார் கந்தர்வாவை ஒரு அகில இந்திய இசை மாநாட்டில் சந்தித்தார். புகழ்பெற்ற இசைக்கலைஞரின் கீழ் பாரம்பரிய இசையை கற்க விரும்புவதைப் பற்றி அவருக்குத் தெரிவித்தார். [5] கந்தர்வா இவரை மும்பைக்கு வரச் சொன்னார். ஆனால், அச்சமயத்தில் இரண்டாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இது மும்பைக்கு செல்வதைத் தடுத்தது. [6] பின்னர், கொல்கத்தாவிலேயே தங்கி, இசையைக் கற்றுக் கொண்ட இவர் கொல்கத்தா அகில இந்திய வானொலியின் நிலையத்திற்காக நிகழ்ச்சியை நிகழ்த்தத் தொடங்கினார். போருக்குப் பிறகு, இவர் 1946 இல் மும்பைக்குச் சென்றார். கந்தர்வாவுக்கு அந்த நேரத்தில் இவருக்கு கற்பிக்க நேரம் கிடைக்காததால், ஒரு முக்கிய பாடகரும் இசைக்கலைஞருமான பி. ஆர். தியோதரின் கீழ் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர், இவர் பயிற்சிக்காக கந்தர்வாவிடம் திரும்பினார். 1962 இல் இந்த இசைக்கலைஞரை மணந்தார்.
அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு குமார் கந்தர்வாவுடன் வாய்ப்பாட்டுகளில் துணையாக இருந்தார். [7] 1992இல் தனது கணவர் இறந்த பிறகுதான் தனியாக நிகழ்ச்சிகளை மேற்கொண்டார். [4] கந்தர்வாவுடன் அவரது துணையாக இருக்க இவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. [8]
60 களின் முற்பகுதியில் அவர்கள் திருமணம் செய்துகொண்டபோது, குமார்ஜியின் வாழ்க்கையில் வசுந்தராவின் பங்கு மாறவில்லை, குறைந்தபட்சம் அவரது மதிப்பீட்டில். "தான் முதலில் ஒரு மாணவன், பின்னர்தான் மனைவி" என்று இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களுக்கு தெரிவித்தார். [9]
தனது குருவான தியோதரால் அறியப்பட்ட குவாலியர் கரானாவின் கியால் பாரம்பரியத்தை பின்பற்றி, இவர் இந்தியாவில் பல்வேறு கட்டங்களில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் 1998இல் இந்துஸ்தானி வாய்ப்பாட்டுக்காக சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். [1] ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசு 2006 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை வழங்கியது.[2]
வசுந்தரா கொம்காலி 2015 சூலை 29 அன்று தனது 84வது வயதில், மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலுள்ள தேவாஸ் என்ற ஊரில் உள்ள தனது வீட்டின் இறந்தார். [10] மேலும் இவரது இறுதிச் சடங்குகள் அங்கேயே நடத்தப்பட்டன. [11] [12] இவரது மகள் கலாபினி கொம்காலியும் ஒரு இந்துஸ்தானி இசையின் பிரபல பாடகர் ஆவார். [13]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)