வடகிழக்கு எல்லைப்புற ஏஜென்சி எனப்படும் நேபா (North East Frontier Agency (NEFA) (முன்னர் வடகிழக்கு எல்லைப்புற பிரதேசங்கள் என்று அழைக்கப்பட்டது) (formerly the North-East Frontier Tracts), 1947 முடிய பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகப்பகுதியாகவும், இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்தில், அருணாச்சலப் பிரதேச மாநிலமாகவும் உள்ளது.
1974ல் இதன் நிர்வாகத் தலைமையிடம் இட்டாநகருக்கு மாற்றப்படும் வரை, சில்லாங் நகரம் தலைமையிடமாக விளங்கியது.
பிரித்தானிய இந்திய அரசு, வங்காள மாகாணத்தை 1905ல் பிரித்த பின்னர், 1905 முதல் 1912 முடிய, புதிதாக அமைக்கப்பட்ட கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தில், வடகிழக்கு எல்லைப்புற முகமையின் பகுதிகள் அமைந்திருந்தது. இதன் தலைநகரம் டாக்கா நகரம் ஆகும். [1] [2]
1912ல் மீண்டும் கிழக்கு வங்காளத்தை, வங்காள மாகாணத்துடன் இணைத்த பின்பு, வடகிழக்கு எல்லைப்புற முகமையை, புதிதாக துவக்கப்பட்ட அசாம் மாகாணத்தில் 1947 முடிய இருந்தது.
பின்னர் 1951ல் இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்புறத்தில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பிரதேசங்களைக் கொண்டு வடகிழக்கு எல்லைப்புற ஏஜன்சி (நேபா) என்ற நிர்வாகப் பகுதி அமைக்கப்பட்டது.[3]
26 சனவரி 1954ல் வடகிழக்கு எல்லைப்புற ஏஜன்சியை ஆறு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
1 ஆகஸ்டு 1965 முதல் வடகிழக்கு எல்லைப்புற ஏஜன்சி நிர்வாகத்தை இந்திய அரசின் வெளியுறவுத் துறையிடமிருந்து, உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது. 1972 வரை அசாம் மாநில ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த வடகிழக்கு எல்லைப்புற ஏஜன்சி, இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது.
21 சனவரி 1972ல் வடகிழக்கு முன்னனி ஏஜன்சியை அருணாச்சலப் பிரதேசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, இந்திய அரசின் முதன்மை ஆனையாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது.
20 பிப்ரவரி 1987ல் அருணாச்சலப் பிரதேசத்திற்கு மாநிலத் தகுதி வழங்கிய பின், வடகிழக்கு எல்லைப்புற ஏஜன்சி கலைக்கப்பட்டது.