வடகிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)

வடகிழக்கு தொடருந்து மண்டலம்
पूर्वोत्तर रेलवे
2-வடகிழக்கு தொடருந்து மண்டலம்
கண்ணோட்டம்
தலைமையகம்காரக்பூர்
செயல்பாட்டின் தேதிகள்1952–இன்றுவரை
முந்தியவைOudh and Tirhut Railway, Assam Railway, Cawnpore-Barabanki Railway and Cawnpore-Achnera section
தொழில்நுட்பம்
தட அளவிMixed
Other
இணையதளம்North Eastern Railway

வடகிழக்கு தொடருந்து மண்டலம் (North Eastern Railway) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் கோரக்பூரில் உள்ளது. இது பெரும்பாலும் உத்தரப்பிரதேசம், உத்தராஞ்சல் மற்றும் பீகாரின் மேற்கு மாவட்டங்களுக்கு சேவையை வழங்குகிறது.

தற்போது இது மூன்று கோட்டங்களை உள்ளடக்கியது.

14 ஏப்ரல் 1952ல் வடகிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) தொடங்கப்பட்டது, இது அசாம் இரயில்வே, அவுத், திர்கட் இரயில்வே நிறுவனங்கள் மற்றும் கான்பூர் - அச்நேரா பிரிவுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. பின்னர் 27 பிப்ரவரி 1953ல் கான்பூர் - பாராபன்கி இரயில்வேயும் இந்த மண்டலத்தோடு இணைக்கப்பட்டது.

இந்த மண்டலம் 15 ஜனவரி 1958ல் வடகிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) மற்றும் வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் (இந்தியா) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கத்திகாருக்கு கிழக்கே உள்ள அனைத்து தொடருந்து இணைப்புகளும் வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது.[1]

1 அக்டோபர் 2002ல் இரயில்வே மண்டலங்கள் சீரமைப்பின்பொழுது, சமஸ்திபூர் மற்றும் சோன்பூர் கோட்டங்கள் கிழக்கு மத்திய தொடருந்து மண்டலத்தோடு இணைக்கப்பட்டது. வடகிழக்கு தொடருந்து மண்டலம் (NER) 3,402.46 கிமீ வழித்தடங்களையும் 486 தொடருந்து நிலையங்களையும் தன்னக்கத்தே கொண்டுள்ளது.

இந்த தொடருந்து மண்டலத்தில் முக்கியமான சுற்றுலா மற்றும் கலாச்சார நகரங்கள் உள்ளது. அவற்றுள் சில வாரணாசி, சாரநாத், அலகாபாத், குசிநகர், அயோத்தி, நைநிடால், லும்பினி, கவுசினி, துத்வா ஆகும்


குறிப்புகள்

[தொகு]
  1. Rao, M.A. (1988). Indian Railways, New Delhi: National Book Trust, pp.42-4

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]