மலேசிய கூட்டரசு சாலை 20 Malaysia Federal Route 20 Laluan Persekutuan Malaysia 20 | |
---|---|
வடக்கு கிள்ளான் புறவழிச் சாலை North Klang Straits Bypass | |
வழித்தடத் தகவல்கள் | |
AH141 புதிய வடக்கு கிள்ளான் புறவழிச்சாலை- இன் பகுதி | |
பராமரிப்பு Grand Sepadu Sdn Bhd | |
நீளம்: | 15.1 km (9.4 mi) |
பயன்பாட்டு காலம்: | 1983 – |
வரலாறு: | கட்டுமானம் 1985 |
முக்கிய சந்திப்புகள் | |
வடமேற்கு முடிவு: | நார்த்போர்ட், கிள்ளான் துறைமுகம் |
நார்த்போர்ட் AH141 கிள்ளான் புறவழிச்சாலை | |
தென்கிழக்கு முடிவு: | சுங்கை ராசாவ் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | காப்பார், புக்கிட் ராஜா கிள்ளான் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
வடக்கு கிள்ளான் புறவழிச் சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை 20 (ஆங்கிலம்: Malaysia Federal Route 20; அல்லது North Klang Straits Bypass; மலாய்: Laluan Persekutuan Malaysia 20) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் துறைமுகத்தில் உள்ள ஒரு சாலை ஆகும்.[1]
இந்தச் சாலை, பல சாலைகளின் உதவியுடன் சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்தை (Port Klang) இணைக்கிறது.[2]
1970-களின் பிற்பகுதியில் கிள்ளான் துறைமுகத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கியது. கட்டுமானம் 1983-இல் தொடங்கப்பட்டு 1 சனவரி 1985-இல் நிறைவடைந்தது.
இந்தச் சாலை 15.1 கிமீ (9.4 மைல்) நீளம் கொண்டது; மற்றும் சிலாங்கூர், கிள்ளான் துறைமுகத்திற்குச் செல்லும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான சரக்கு சுமையுந்துகள் செல்கின்றன.
மலேசிய கூட்டரசு சாலை 19-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.[3]
இந்தச் சாலையின் சிறப்புக் கூறுகள்: