வடசென்னை அனல்மின் நிலையம் | |
---|---|
![]() வடசென்னை அனல்மின் நிலையம் | |
நாடு | இந்தியா |
அமைவு | 13°14′51″N 80°19′36″E / 13.24750°N 80.32667°E |
நிலை | இயக்கத்தில் உள்ளது. |
இயங்கத் துவங்கிய தேதி | உலை 1: அக்டோபர் 25, 1994 உலை 2: மார்ச்சு 27, 1995 உலை 3: பிப்ரவரி 24, 1996 உலை 4: செப்டம்பர் 2013 உலை 5: செப்டம்பர் 2013 |
வடசென்னை அனல்மின் நிலையம் சென்னையில் இருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ள மின் நிலையம் ஆகும்.[1]தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மின் நிலையங்களில் ஒன்றான இதன் மொத்த உற்பத்தி திறன் 1830 மெகாவாட்டு ஆகும்.[2][3][4]
வடசென்னை அனல்மின் நிலையம் 1994ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்பட்டது. எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதிக்கு பயன்பட்ட எண்ணூர் துறைமுகம் அருகில் இருந்ததே இம்மின்னிலையம் இங்கு அமைக்கபட முக்கிய காரணம் ஆகும். இந்நிலையம் துணை நுகர்வு மட்டுப்படுத்துதல் மற்றும் உற்பத்தி மேம்படுத்துதல் ஆகியனவற்றிற்கு பல விருதுகளை பெற்றுள்ளது.[2][5] இந்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி எண்ணூர் துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது.[6] அண்மையில் இந்நிலையத்திற்கு ஒரு நிலையகம் (Stator) கடல் வழியாக வாங்கி எடுத்துவரப்பட்டது.[7] அண்மைக்காலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் இந்நிலையத்தை இயக்க நிலக்கரி வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.[8]
பகுதி | பிரிவு எண் | உற்பத்தி திறன் (மெகாவாட்டு) | நிறுவப்பட்ட தேதி | தற்போதைய நிலை |
---|---|---|---|---|
முதல் | 1 | 210 | 1994 அக்டோபர் | இயங்குகிறது |
முதல் | 2 | 210 | 1995 மார்ச்சு | இயங்குகிறது |
முதல் | 3 | 210 | 1996 பிப்ரவரி | இயங்குகிறது |
2ஆம் | 4 | 600 | 2013 செப்டம்பர் | இயங்குகிறது |
2ஆம் | 5 | 600 | 2013 செப்டம்பர் | இயங்குகிறது |