North-Western Provinces | |||||
மாகாணம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் (1858 வரை) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் (1858 முதல்) | |||||
| |||||
கொடி | |||||
![]() | |||||
தலைநகரம் | ஆக்ரா (1836–1858), அலகாபாத் (1858–1902)[1] | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1836 | |||
• | வடமேற்கு மாகாணத்திலிருந்த தில்லி பகுதி பஞ்சாப் மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. | 1858 | |||
• | சௌகோர் மற்றும் நேர்புத்தா பகுதிகள் வடமேற்கு மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது. | 1861 | |||
• | வடமேற்கு மாகாணத்திலிருந்து அஜ்மீர் பிரிக்கப்பட்டது. | 1871 | |||
• | துணை ஆளுநரின் கீழ் வடமேற்கு மாகாணம் | 1877 | |||
• | Disestablished | 1902 | |||
பரப்பு | |||||
• | 1835 | 9,479 km2 (3,660 sq mi) | |||
Population | |||||
• | 1835 | 45,00,000 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 474.7 /km2 (1,229.6 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | ![]() |
வடமேற்கு மாகாணம் (North-Western Provinces) பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் 1836-இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினரால் நிறுவப்பட்டது. 1835=இல் 9479 சதுர மைல் நிலப்பரப்பு கொண்டிருந்த இம்மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 45,00,000 (45 இலட்சம்) ஆகும்.
பின்னர் இம்மாகாணம் 1858-இல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் வந்தது. 1858-இல் அயோத்தி நவாப் ஆண்ட அவத் பிரதேசத்தை பறித்து, வடமேற்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டு வடமேற்கு மாகாணம் மற்றும் அவத் எனப்பெயரிடப்பட்டது.
1902-இல் இம்மாகாணத்தை மறுசீரமைத்து ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம் எனப்பெயரிடப்பட்டது. [2] அலகாபாத் நகரம் இம்மாகாணத்தின் தலைநகராக செயல்பட்டது.[1]1937-இல் மீண்டும் இம்மாகாணத்தை மறுசீரமைத்து ஐக்கிய மாகாணம் என 1950 வரை அழைக்கப்பட்டது.
இம்மாகாணத்தில் தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ மற்றும் பைசாபாத் கோட்டம் தவிர்த்து அனைத்து பகுதிகளும் இருந்தது. வடமேற்கு மாகாணத்திலிருந்த தில்லி பகுதி பஞ்சாப் மாகாணத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அஜ்மீர் மற்றும் சௌகோர் மற்றும் நேர்புத்தா பகுதிகள் வடமேற்கு மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
வடமேற்கு மாகாணத்தின் நிர்வாகியாக துணைநிலை ஆளுநர் செயல்பட்டார்.