வடிவேல் சுரேஷ் Vadivel Suresh | |
---|---|
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
பதவியில் 2004–2010 | |
சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துகளுக்கான துணை அமைச்சர் | |
பதவியில் 2005–2007 | |
சுகாதாரத் துணை அமைச்சர் | |
பதவியில் 2007–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 12, 1971 |
தேசியம் | இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | டாப்னி வடிவேல் சுரேஷ் |
பிள்ளைகள் | ஷேன் பிரதீஷ் வடிவேல் சுரேஷ் ஹாஷ்லி பிருந்தா வடிவேல் சுரேஷ் கெவின் கரன் வடிவேல் சுரேஷ் கெனி காவியா வடிவேல் சுரேஷ் |
வாழிடம் | பதுளை |
வடிவேல் சுரேஷ் (பிறப்பு: 12 மே 1971) இலங்கையின் மலையக அரசியல்வாதியும்,[1] நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை அமைச்சரும் ஆவார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியூடாக அரசியலில் நுழைந்த வடிவேல் சுரேஷ் 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் பதுளை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[2] சுகாதாரத் துணை அமைச்சராக 2005 முதல் 2010 வரை பதவியில் இருந்தார். 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மூலம் ஊவா மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் அம்மாகாணசபையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து, மாகாண அரசைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசில் மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
வடிவேலு சுரேஷ் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 52,318 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6]