வடுவூர் பறவைகள் காப்பகம் | |
---|---|
Nature Reserving Sanctuary | |
ஆள்கூறுகள்: 10°41′56″N 79°19′21″E / 10.698943°N 79.322469°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
நிறுவிய ஆண்டு | 1999 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகிலுள்ள நகரம் | தஞ்சாவூர் |
நிர்வாகம் | தமிழ்நாடு அரசு |
வடுவூர் பறவைகள் காப்பகம் (Vaduvoor Bird Sanctuary) என்பது திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.
வடுவூர் ஏரி, பறவைகள் சரணாலயமாக 1999-இல் அறிவிக்கப்பட்டது.
தட்பவெப்ப நிலைத் தகவல், வடுவூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 21.0 (69.8) |
25.0 (77) |
32.0 (89.6) |
38.0 (100.4) |
42.0 (107.6) |
42.0 (107.6) |
37.0 (98.6) |
35.0 (95) |
35.0 (95) |
34.0 (93.2) |
29.0 (84.2) |
23.0 (73.4) |
32.75 (90.95) |
தாழ் சராசரி °C (°F) | 09.0 (48) |
11.0 (51.8) |
17.0 (62.6) |
23.0 (73.4) |
29.0 (84.2) |
31.0 (87.8) |
29.0 (84.2) |
28.0 (82.4) |
26.0 (78.8) |
23.0 (73.4) |
18.0 (64.4) |
12.0 (53.6) |
21.3 (70.4) |
பொழிவு mm (inches) | 7.0 (0.276) |
13.0 (0.512) |
7.0 (0.276) |
6.0 (0.236) |
5.0 (0.197) |
20.0 (0.787) |
66.0 (2.598) |
66.0 (2.598) |
53.0 (2.087) |
2.0 (0.079) |
1.0 (0.039) |
2.0 (0.079) |
248 (9.76) |
ஆதாரம்: Best time to visit, weather and climate Vaduvoor[1] |
1999-ஆம் ஆண்டு சூலை மாதம் இந்தப் பறவைகள் காப்பகம் உருவாக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்துவிடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின்போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவகை செய்து விடுகிறது. இங்கு நடைபாதை, பறவைகளைப் பார்க்கக் கோபுரங்கள், அமர்ந்துகொள்ள நாற்காலிகள், சிமெண்ட் இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.[2]
இந்த சரணாலயத்திற்கு 40-இற்கும் மேற்பட்ட நீர்ப் பறவைகள் வந்து செல்கின்றன. நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 200,000 பறவைகள் வந்துள்ளன. நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்கள் இங்கு செல்வதற்கு ஏற்ற காலங்கள். அப்போது அதிகளவான பறவைகள் இங்கு வரும். வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் வெள்ளை அரிவாள் மூக்கன், மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, ஊசிவால் வாத்து, நீர்க்காகம், கிளுவை, ஹெரான், துடுப்பு வாயன், பாம்புத் தாரா, நாமக்கோழி, நத்தை குத்தி நாரை மற்றும் நீளவால் தாழைக்கோழி போன்ற 40க்கும் மேற்பட்ட வகையான நீர் பறவைகள் உள்ளன. இந்த சரணாலயம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புலம்பெயர் பறவைகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.
தஞ்சாவூர் மற்றும் மன்னார்குடியிலிருந்து நாள் முழுவதும் பேருந்துகள் உள்ளன.
வடுவூருக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் தஞ்சாவூர் சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் மன்னார்குடி தொடருந்து நிலையம் ஆகும்.
வடுவூருக்கு அருகிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும், வடுவூரிலிருந்து சுமார் இரண்டு மணிநேர பயணத்தில் (85 கி.மீ.) செல்லலாம். இது பெங்களூர், சென்னை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள நகரங்களுடன் ஆகியவற்றுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.