வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை | |
---|---|
வகை | மர்மப் புனைவு குற்றப்புனைவு |
எழுத்து | ஆண்ட்ரூ லூயிஸ் |
இயக்கம் | ஆண்ட்ரூ லூயிஸ் |
நடிப்பு |
|
இசை | சிமோன் கே. கிங் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 8 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | கெளதம் செல்வராஜ் |
தயாரிப்பாளர்கள் | புசுகர் காயத்ரி |
ஒளிப்பதிவு | சரவணன் ராமசாமி |
தொகுப்பு | ரிச்சர்டு கெவின் |
ஓட்டம் | 40-50 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | அமேசான் பிரைம் வீடியோ |
ஒளிபரப்பான காலம் | 2 திசம்பர் 2022 தற்பொழுது | –
வதந்தி: வெலோனியின் கட்டுக்கதை (Vadhandhi: The Fable of Velonie) என்பது 2022ஆம் ஆண்டு வெளியான இந்திய-தமிழ் மொழி மர்ம குற்றப்புனைவு தொலைக்காட்சித் தொடராகும். இது லீலை மற்றும் கொலைகரான் புகழ் ஆண்ட்ரூ லூயிஸ், அமேசான் பிரைம் வீடியோவால் உருவாக்கப்பட்டது.[1][2][3][4] இதை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கினார். இந்தத் தொடரில் எஸ். ஜே. சூர்யா, லைலா, நாசர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா, குமாரன் தங்கராஜன், வைபவ் முருகேசன், விக்கி ஆதித்யா மற்றும் ஹரீஷ் பேராடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[5] இது 2 திசம்பர் 2022 அன்று திரையிடப்பட்டது.[6][7][8] இத்தொடர் எட்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.