வத்சல் சேத் | |
---|---|
பிறப்பு | 5 ஆகத்து 1980 மும்பை, இந்தியா |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் |
வத்சல் சேத் (குசராத்தி: વત્સલ શેઠ, இந்தி: वत्सल शेठ) (பிறப்பு: 5 ஆகஸ்ட் 1980) ஒரு இந்திய நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஜஸ்ட் மொஹபட் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு டார்சன் : வொண்டர் கார் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இவர் தற்பொழுது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஏக் ஹசினா தி என்ற தொடரில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவர் 2008ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வத்சல் சேத் குசராத்தி பெற்றோருக்கு 1980 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதியன்று மும்பையில் பிறந்தார்.[1] குடும்பத்தில் இருந்த இரண்டு உடன்பிறப்புகளில் இவர் மூத்தவர் ஆவார். சைவ உணவுப் பிரியராகவும் [2] மதுவைப் பயன்படுத்தாதிருக்கும் கொள்கை கொண்டவராகவும் இவர் அறியப்படுகிறார்.[3]