![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வனேடைல் இருகுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10213-09-9 | |
ChemSpider | 8351674 |
EC number | 233-517-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10176169 |
| |
UNII | ET7948FWOY |
பண்புகள் | |
Cl2OV | |
வாய்ப்பாட்டு எடை | 137.84 g·mol−1 |
தோற்றம் | பச்சைநிறத் திண்மம் |
அடர்த்தி | 2.88 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வனேடியம் ஆக்சியிருகுளோரைடு (Vanadium oxydichloride) என்பது VOCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். வனேடியத்தின் பல ஆக்சிகுளோரைடுகளில் ஒன்றான இது பச்சை நிறத்தில் ஒரு திண்மப் பொருளாகவும் நீருறிஞ்சும் தன்மையோடும் காணப்படுகிறது. வனேடியம் முக்குளோரைடு மற்றும் வனேடியம்(V) ஆக்சைடு ஆகியவற்றை விகிதாச்சார அளவுகளில் சேர்த்து வினைபுரியச் செய்து வனேடியம் ஆக்சியிருகுளோரைடு தயாரிக்கப்படுகிறது:[1]
எண்முக வனேடியம் மையங்களுடன் குளோரைடு ஈந்தணைவிகள் இரட்டைப்பாலத்தால் இணைக்கப்பட்ட்ட அடுக்குக் கட்டமைப்பை வனேடியம் ஆக்சியிருகுளோரைடு ஏற்றுக் கொள்கிறது. எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.[2]