வம்சி | |
---|---|
பிறப்பு | 20 நவம்பர் 1956 |
பணி | திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர், இசை இயக்குநர் |
வம்சி (Vamsy) (1956 நவம்பர் 20) இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், இசையமைப்பாளருமாவார். இவர், தெலுங்குத் திரைப்படத்துறையுலகில் பணிபுரிகிறார். 1985 ஆம் ஆண்டில் சித்தாரா என்ற படத்திற்காக தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். இயக்குநர் பாபுவைப் போன்ற கலை உணர்வுடன் திரைப்படத்தை உருவாக்கும் இவர், தனது சொந்த பாணியைக் கொண்டுள்ளார்.
வம்சி 1956 நவம்பர் 20 ஆம் தேதி அம்பிக்கு அருகே பிறந்து ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் இராமச்சந்திரபுரத்திற்கு அருகிலுள்ள பசலாபுடி கிராமத்தில் வளர்ந்தார் .
வம்சி சங்கராபரணம் படத்தில் கே. விஸ்வநாத் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். 1982ஆம் ஆண்டில் சிரஞ்சீவி, சுஹாசினி, திரிபுரனேணி சாய் சந்த், இராஜேந்திர பிரசாத் ஆகியோருடன் மஞ்சுபல்லகி என்ற தனது முதல் படத்தை உருவாக்கும் முன் சீதகோக்கா சிலக்கா என்ற படத்தில் பணி புரிந்தார். இந்த படம் இராபர்ட் இராசசேகரன் இயக்கிய தமிழ்த் திரைப் படமான பாலைவனச்சோலையின் மறு ஆக்கமாகும்.[1] 1984 ஆம் ஆண்டில், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சித்தாராவை உருவாக்கினார். இதன் மூலம் பானுப்ரியாவை தெலுங்குத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த திரைப்படம் இவரது சொந்த புதினமான மகால் லோ கோகிலா என்பதை தழுவி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. 1985 ஆம் ஆண்டில், இராஜேந்திர பிரசாத் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'பிரேமிஞ்சு பெல்லாடு' என்ற படத்தை இயக்கினார்.[2]
தனது தொழில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத்தக்க காலத்திற்கு, இவர் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். இவர்களின் கூட்டணியில் பல சிறந்த படைப்புகள் வெளிவந்தன.[3]