வரதா ஆறு (Varada)(வெரதா நதி) என்பது இந்தியாவின் மத்திய கர்நாடகாவில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது துங்கபத்ரா நதியின் துணை நதியாகும்.
வரதா ஆறு கர்நாடகாவின் சாகராவில் உள்ள வர்தமூலா அருகே உற்பத்தியாகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாகப் பாய்ந்து கர்நாடகாவின் மத்திய மாவட்டங்களில் (ஆவேரி மற்றும் பெல்லாரி) நுழைகிறது. இந்த ஆறு கலகநாத்தில் துங்கபத்ரா நதியுடன் இணைகிறது.[1]
இதன் போக்கில் கன்னட மக்களின் நல்வாழ்வுக்கு முக்கிய பங்காற்றுகிறது. கோடைக்காலத்தில் பாசனம் மற்றும் வீட்டுத் தண்ணீர் தேவைகளை நிறைவேற்றுகிறது. ஆற்றின் போக்கில் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ஆற்றில் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் எதுவும் இல்லை.
இந்த ஆறு இந்தியர்களுக்குத் தெய்வீகத் தொடர்பு கொண்டது.
சிருங்கரிஷி ஒரு முறை கடும் தவம் செய்து, பிரம்மஹத்யதோஷம் செய்ததற்காக, பகவான் விஷ்ணுவிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்தார். ஸ்ரீமன் நாராயணர் இவர் முன் தோன்றி ரிஷியின் தலையில் கங்கை நீரை ஊற்றினார். இந்த கங்கை நீரே இந்த ஆறாக உருவாக்கியது என நம்பப்படுகிறது.