வரலாறு | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. எஸ். ரவிகுமார் |
தயாரிப்பு | எஸ்.எஸ் சக்கரவர்த்தி |
கதை | சுஜாதா (எழுத்தாளர்) |
இசை | ஏ.ஆர்.ரஹ்மான் |
நடிப்பு | அஜித் குமார், அசின், கனிகா சுப்ரமணியம், ரமேஷ் கன்னா சுமன் ஷெட்டி |
ஒளிப்பதிவு | பி.சி. ஸ்ரீ ராம் , ப்ரியன் |
விநியோகம் | நிக் ஆர்டஸ் |
வெளியீடு | 2006 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹12 கோடி |
மொத்த வருவாய் | ₹50 கோடி |
வரலாறு (Varalaru: History of Godfather) 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரம்பத்தில் காட்ஃபாதர் என்ற தலைப்பினைக் கொண்ட இத்திரைப்படம் வரலாறு என மாற்றம் கொண்டது. இப்படம் 2002-ல் வெளியான வில்லன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இப்படத்தை எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார் .
அப்பாவின் அறிவுரைப்படி, தங்கள் குடும்பம் தத்து எடுத்திருக்கும் கிராமத்திற்கு தன் நண்பர்களுடன் சேவை செய்யப்போகும் பிள்ளைக்கு, அங்கு காணும் கல்லூரி மாணவி அசின் மீது எதிர்பாராமல் காதல் வருகிறது. அசினும் காதல் கொள்ள இருவீட்டு சம்மதத்துடன் கல்யாண தேதி குறிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அசின் வீட்டிற்கு குடித்து விட்டு செல்லும் அஜீத், பயங்கர கலாட்டாவில் ஈடுபடுகிறார். அதைதட்டிக் கேட்கும் தன் அப்பா அஜீத்தையே கொல்லத் துணிகிறார். அசினின் உறவுக்காரத் தோழியை அசின் கண் எதிரிலேயே பலாத்காரம் செய்கிறார். இதை எல்லாம் செய்து விட்டு நான் எதையுமே செய்யவில்லை என்று சொல்கிறார். இதனால் அவரை பைத்தியம் என்று முடிவு செய்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்கின்றனர்.
இதற்கிடையில் அஜீத்தைப் பெற்றத் தாய், உயிருடன் இருக்கும் உண்மை அஜீத்துக்குத் தெரிய வருகிறது. தன் தாய் உயிருடன் இருக்கும் போதே அப்பா அஜீத், தன் அம்மா இறந்துவிட்டதாக கூறி தன்னை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? எனும் குழப்பமும், தன் பெயரில் யாரோ குற்றங்கள்... அதுவும் தன் அப்பாவையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு குற்றங்கள் புரிவது ஏன்? எனும் கேள்விகள் அஜீத் மனதில் எழுகிறது.
அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்ததா? அஜீத்திற்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துள்ளதா? அப்பா அஜீத்தைக் கொன்றாரா? தன் அம்மாவை பார்த்தாரா? அசினை கரம் பிடித்தாரா..? இது மாதிரி பல நூறு கேள்விகளுக்கு சுவரஸ்யமான திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'வரலாறு' படத்தின் மீதிக்கதை!
இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.