தனித் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 25 சூலை 1995 பஞ்சாப் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.72 மீ[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | தடுப்பாட்டக்காரர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூத்தவர் காலம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | தோற்றம் | (கோல்கள்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014– | பஞ்சாப் வாரியர்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–2016 | இந்தியா 21 வயதுக்கு கீழ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017– | இந்தியா | 63 | (11) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Last updated on: 1 மார்ச்சு 2019 |
வருண் குமார் (Varun Kumar) இந்தியாவைச் சேர்ந்த வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1995 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 அன்று குமார் பிறந்தார். வளைகோல் பந்தாட்ட தொழில்முறை வீரரான இவர் அணியில் ஒரு தடுப்பாட்டக்காரராக விளையாடுகிறார். வளைகோல் பந்தாட்ட கூட்டினைவுப் போட்டியிலும், இந்திய தேசிய அணியிலும் இவர் தடுப்பாட்ட வீரராகவே விளையாடினார். தற்பொழுது டோக்கியோ கோடை கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் விளையாட இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாபில் பிறந்த குமார் முதலில் பள்ளியில் படிக்கும் போது வளைகோல் பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். [2] 2012 ஆம் ஆண்டில் இளையோர் தேசிய வெற்றியாளர் போட்டியில் தனது சொந்த மாநிலமான பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்தி மிகச் சிறப்பாக விளையாடினார். இதனால் தேசிய இளையோர் அணிக்கு விளையாட அழைக்கப்பட்டார். [2] 2014 ஆம் ஆண்டு இளையோர் தேசிய வெற்றியாளர் போட்டிகளில் குமார் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கும், இளையோர் தேசிய அணிக்கு மீண்டும் அழைக்கப்படுவதற்கும் முன்பாக இரண்டு வருடங்கள் காயம் காரணமாக விளையாடாமல் அமைதியாக இருந்தார்.
குமார் விரைவில் இந்திய வளைகோல் பந்தாட்ட கூட்டிணைவு போட்டியில் பஞ்சாப் வாரியர்சு அணியில் விளையாட கையெழுத்திட முடிந்தது. இவர் 2014 பருவப் போட்டிகளுக்காகத் தக்கவைக்கப்பட்டார். [3] இதன் பிறகும் கூட்டிணைவின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான அணிக்காகவும் குமார் மேலும் இரண்டு வருட காலத்திற்கு தக்கவைக்கப்பட்டார். [4]
குமார் இந்தியா இளையோர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இளையோர் உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் எசுப்பானியாவில் நடந்த நான்கு நாடுகளின் அழைப்பிதழ் போட்டியின் போது குமார் அதிக புள்ளிகள் ஈட்டிய வீரராக உருவெடுத்தார். [5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)