வருண் தாக்கர் (Varun Thakkar, பிறப்பு: 10, பிப்ரவரி, 1995 தமிழ்நாடு ) என்பவர் ஒரு இந்திய தொழில்முறை படகோட்டி ஆவார். இவர் தற்போது லேசர் ஸ்டாண்டர்ட் மற்றும் ரெகாட்டா பிரிவில் சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பில் போட்டியிருகிறார். [1]
2021 ஆம் ஆண்டில், ஓமானின், முசானாவின் மில்லினியம் ரிசார்ட்டில் நடந்த 2021 முஸ்சன்னா ஓபன் பாய்மரப் படகு போட்டியில் 49 இஆர் பிரிவு போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தைப் பெற்றார். [2] மேலும் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். [3] [4]
வருண் ஓமானின் முசானாவில் நடைபெற்ற 2021 முசானா ஓபன் (ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஒலிம்பிக் தகுதி) போட்டியில் முதலாவது இடத்தைப் பிடித்த கணபதி ஒலிம்பிக் விளையாட்டுகள் 2020 க்கு செல்ல இருக்கிறார். அதன்படி இவர் ஜப்பானின், டோக்கியோவில் நடக்கவிருக்கும் 2021 கோடைகால ஒலிம்பிக்கில் படகோட்டத்தில் ஸ்கிஃப் - 49 இஆர் பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்துகொள்கிறார். [5] [6] [7]
ஆண்டு | போட்டி | இடம் | நிலை |
---|---|---|---|
2021 | 2021 முசானா ஓபன் சாம்பியன்சிப் | ஓமன் ![]() |
1 |
2019 | 49 இ ஆர் உலக சாம்பியன்சிப் 2019 | ஆக்லாந்து ![]() |
65 |
2019 | 2019 ஓசியானியா சாம்பியன்சிப் | ஆக்லாந்து ![]() |
39 |
2019 | 49 இஆர் ஆசிய சாம்பியன்சிப் 2019 | அபுதாபி ![]() |
2 |
2018 | ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 | ஜகார்த்தா ![]() |
3 |
2017 | 17 வது ஆசிய படகோட்ட சாம்பியன்சிப் | ஜகார்த்தா ![]() |
1 |