வரைகலை நூலகம் (Graphics library) என்பது கணினித் திரையில் காட்சிகளைக்காட்டுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு நிரலாக்க நூலகம் ஆகும். இது பொதுவாக வழக்கமான வரைகலை செயல்பாடுகளை கையாள ஈடுபடுத்தப்படுகின்றது. இது முழுமையாக மையச் செயற்பகுதியில் (CPU) செயல்படக்கூடியது, பதிக்கப்பட்ட அமைப்புகளில் பொதுவானது. வரைகலை செயலி அலகினால் (GPU) செயல்படுத்தப்படுகின்றது. இதை பயன்படுத்துவதன் மூலம் ஒரு நிரலால் திரையில் காட்சிகளை கொண்டுவர முடியும். இது, இந்த நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கும் மற்றும் கையாளும் நிரலாளருக்கு உதவுகின்றது. மேலும் அவர்களுக்கு வரைகலை நிரலை உருவாக்க அனுமதிக்கின்றது. இது முக்கியமாக கணினி விளையாட்டுக்களில் பயன்படுகின்றது.
சில நூலகங்கள் ஜி.எல் (G.L) எனும் பெயரைப் பயன்படுத்துகின்றன, குறிப்பாக திறந்த ஜி எல், வலை ஜி எல்.