![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நோக்கம் | நரம்புத் தாக்குதல், கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்கள் |
---|---|
கடினத்தன்மை | முழு தாக்குதல், அரைத் தாக்குதல் |
தோன்றிய நாடு | இந்தியா |
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
Meaning | "Practice in the arts of the battlefield." |
வர்மக்கலை(Varma kalai) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது.[சான்று தேவை]
இது முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது. முற்காலத்தில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்பட்ட நிலையில், இதை தவறாக பயன்படுத்தியன் காரணமாக[சான்று தேவை] இது குருக்காளால் கற்பிக்கப்படாமல் முற்றிலுமாக அழியும் நிலையை எட்டிவிட்டது.
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே வர்மம் எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை.[1] அதாவது உயிர்நிலைகளின் ஓட்டம் எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.[2]