வலாடிசிலாவ் குல்சின்சுகி | |
---|---|
பிறப்பு | 27 மார்ச்சு 1854 கிராக்கோவ் |
இறப்பு | 9 திசம்பர் 1919 கிராக்கோவ் |
தேசியம் | போலந்து |
துறை | எட்டுக்காலியியல் |
Author abbrev. (zoology) | குல்சின்சுகி |
வலாடிசிலாவ் குல்சின்சுகி (Wladyslaw Kulczynski) (27 மார்ச் 1854, கிராக்கோவ்-9 திசம்பர் 1919, கிராக்கோவ்) போலந்து நாட்டைச் சேர்ந்த விலங்கியல் நிபுணர் ஆவார்.[1][2] 1877ஆம் ஆண்டு கிராக்கோவ், ஜாகிலோனியன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்ற குல்சின்சுகி, முனைவர் பட்டத்தினை 1906ஆம் ஆண்டு ஜாகிலோனியன் பல்கலைக்கழகத்தில் முடித்தார். குல்சின்சுகியின் அறிவியல் வாழ்க்கை பெரும்பாலும் விலங்கு பரிணாமம் மற்றும் வகைப்பாட்டியல் நிறுவனத்துடன் தொடர்புடையது. இந்த நிறுவனத்தின் இயற்புவியியல் ஆணையத்தின் அறிவியல் செயலாளர் (1879-1919), பாதுகாவலர் (1896 முதல்) மற்றும் அகாதமியின் இயற்புவியியல் அருங்காட்சியகத்தின் தலைவராகவும் (1906-1919) பணியாற்றினார்.