வலிமை | |
---|---|
இயக்கம் | அ.வினோத் |
தயாரிப்பு | போனி கபூர் |
கதை | அ.வினோத் |
இசை | பின்னணி இசை: ஜிப்ரான் பாடல்கள்: யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | விஜய் வேலுக்குட்டி |
கலையகம் | ஜீ ஸ்டுடியோ பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி நிறுவனம் |
விநியோகம் | ஜீ ஸ்டுடியோ ரோமியோ பிக்சர்ஸ் கோபுரம் சினிமாஸ் |
வெளியீடு | பெப்ரவரி 24, 2022 |
ஓட்டம் | 179 நிமிடங்கள்[1] 167 minutes (edited version)[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹150 கோடி[3] |
மொத்த வருவாய் | 350 கோடி |
வலிமை (Valimai) [4] என்பது 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி அதிரடித் திரைப்படமாகும். இதை இயக்குநர் வினோத் எழுதி இயக்கியிருந்தார். பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் கீழ் இணை தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் இணைந்து ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித்குமார், கார்த்திகேயா, ஹூமா குரேசி மற்றும் குர்பானி ஜட்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் படத்தின் இசையமைப்பாளராகவும் யுவன் ஷங்கர் ராஜா பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.
இது ஒரு காவல்துறை அதிகாரியான அர்ஜுனைச் சுற்றி வருகிறது. அவர் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டுவரும் சட்டவிரோத இருசக்கர வாகனக் குழுவைக் கண்காணிக்க நியமிக்கப்படுகிறார்.
மேலும், அர்ஜுனின் மறைந்த தந்தையாக மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் உருவப்படமும் படத்தில் இடம்பெற்றுள்ளது.[8][9]