Producer | கிளாரிவேட் (கனடா & ஆங்காங்) |
---|---|
History | 2015-முதல் |
Coverage | |
Disciplines | பல்வேறு துறை சார்ந்தது |
Geospatial coverage | உலகம் முழுவதும் |
Links | |
Website | clarivate |
வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் (Emerging Sources Citation Index-ESCI) என்பது 2015ஆம் ஆண்டு முதல் தாம்சன் ராய்ட்டர்ஸ் மற்றும் இப்போது கிளாரிவேட் மூலம் வெளியிடப்படும் மேற்கோள் குறியீட்டெண் ஆகும். வெளியீட்டாளரின் கூற்றுப்படி, குறியீட்டில் "பிராந்திய முக்கியத்துவம் மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் துறைகளின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட வெளியீடுகள்" அடங்கும்.[1]
வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் மற்ற கிளாரிவேட் குறியீடுகளுடன் அறிவியல் வலை மூலம் அணுகப்படுகிறது.[2][3] சூன் 2021 நிலவரப்படி, வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்ணில் குறியிடப்பட்ட அனைத்து ஆய்விதழ்களும் ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆய்விதழ்கள் தாக்கக் காரணியைப் பெறவில்லை என்றாலும், இவை பிற இதழ்களின் தாக்கக் காரணிகளைக் கணக்கிடுவதற்கு மேற்கோள்களை வழங்குகின்றன.[4][5]
வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண்ணில் ஆய்விழைச் இணைக்க, ஆய்விதழ்கள் கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.[6]
ஜெப்ரி பீல், கிளாரிவேட் தயாரித்த தரவுத்தளங்களில், வளர்ந்துவரும் ஆதாரங்களின் மேற்கோள் குறியீட்டெண் இணைவது மிகவும் எளிதானது என்றும், இதன் விளைவாகப் பல ஏமாற்று ஆய்விதழ்கள் உள்ளன என்றும் வாதிட்டார்.[7][8]