வளையக் கணையம் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | medical genetics |
ஐ.சி.டி.-10 | Q45.1 |
ஐ.சி.டி.-9 | 751.7 |
ம.இ.மெ.ம | 167750 |
மெரிசின்பிளசு | 001142 |
வளையக் கணையம் (ஆங்கில மொழி: annular pancreas) என்பது சிறுகுடலின் இரண்டாம் பாகம் கணையத்திசு வளையத்தால் சூழப்பட்டிருக்கும் வகையில் மிக அரிதாகக் காணப்படும் ஒரு நோய்நிலை. இந்தநிலையில் வளையப்பகுதி சிறுகுடலை இறுக்கி சிறுகுடல் அடைப்பை (intestinal obstruction) ஏற்படுத்தும். பெரும்பாலானவர்களுக்கு எந்த வித அறிகுறிகளும் இல்லாமல் இருப்பதால் எத்தனை பேருக்கு இந்நோய் ஏற்படுகிறதென்பது துல்லியமாய்த் தெரியவில்லை.[1] 12,000 உள் ஒரு குழந்தையோ அல்லது 15,000 உள் ஒரு குழந்தையோ இந்நிலையால் பாதிக்கப்படக் கூடுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.[2]
பிறழ்வான கருவளர்ச்சியின் காரணமாக இது உண்டாகிறது. எனினும் வயதுவந்தோரிலும் இந்நிலை ஏற்படக்கூடும்.
ஆரம்பநிலை அறிகுறிகளாவன: மிகை பனிக்குடநீர் (polyhydramnios), எடைக்குறைவுள்ள கரு
குழந்தை பிறந்த பின், வாந்தி போன்றவை ஏற்படும்.
பலருக்கு எந்த வித அறிகுறிகளும் இருப்பதில்லை.
வயிற்றுப்பகுதியில் எக்ஸ்-ரே, மீயொலி நோட்டம், சி. டி. ஸ்கேன்
அடைபட்ட பகுதியைத் தாண்டி உணவு செல்லும் பொருட்டு மாற்றுப் பாதை உருவாக்குதல் [3]