பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோயெக்சேன்-1,2,3,4,5,6-எக்சாதயோன்
| |
வேறு பெயர்கள்
1,2,3,4,5,6-வளையயெக்சேன்யெக்சாதயோன்
| |
இனங்காட்டிகள் | |
129917-29-9 | |
ChemSpider | 28680776 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 71340739 |
| |
பண்புகள் | |
C6S6 | |
வாய்ப்பாட்டு எடை | 264.43 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வளையயெக்சேன்யெக்சாதயோன் (Cyclohexanehexathione) என்பது C6S6 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒவ்வொரு வளையத்துடனும் கந்தகம் பிணைக்கப்பட்ட ஆறு கார்பன் வளையங்கள் கொண்ட ஒரு சகப் பிணைப்பு சேர்மம் ஆகும். பொருண்மை நிறமாலைமானியில் ஒற்றை எதிர்மின்னயனியை (C6S6–) நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தி வளையயெக்சேன்யெக்சாதயோன் தயாரிக்கப்படுகிறது.[1] இந்த சேர்மம் வளையயெக்சேன்யெக்சோனின் தயோகீட்டோன் ஒப்புமை சேர்மமாகும். இதன் ஆக்சிசன் மாறுபாடு கணிசமாக குறைந்த நிலைப்புத்தன்மை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த கந்தக இணை வளைய இருதயோகார்பனேட்டு அலகுகள் கொண்டுள்ள முன்னோடிச் சேர்மத்திலிருந்து மூன்று சமான கார்பனோராக்சைடை வெளியேற்றுவதற்காக ஒளியாற்பகுப்பு அல்லது தீயாற்பகுப்பு மூலம் வளையயெக்சேன்யெக்சாதயோன் தயாரிக்கப்படுகிறது.[2] வெவ்வேறு இருதையீட்டு கட்டமைப்புகள் கொண்ட இணைதிற மாற்றியன்கள் இச்சேர்மத்தைக்காட்டிலும் நிலையானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[3]
பல்வேறு மாற்றியன்களின் இத்தகைய தத்துவார்த்த பகுப்பாய்வும் வினையின் சோதனை பகுப்பாய்வும் பொருண்மை நிறமாலை அணுகுமுறை உண்மையில் வளையயெக்சேன்யெக்சாதயோன் சேர்மத்தை உருவாக்குகிறதா என்பதில் ஐயத்தை உண்டாக்குகிறது. ஈராக்சிடேன்களின் நிலைப்புத்தன்மையுடன் ஒப்பிடுகையில் இருதயீட்டுகளின் அதிக நிலைப்புத்தன்மை, ஆக்சிசன் ஒப்புமை சேர்மத்தை விட வளையயெக்சேன்யெக்சாதயோனின் அதிக நிலைப்புத்தன்மைக்கான காரணமாக முன்மொழியப்படுவதற்கான தத்துவார்த்த தளங்களில் ஒன்றாகும்.[2]