ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
வளையயெக்சைல் நைட்ரைட்டு | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 5156-40-1 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 545140 |
ChemSpider | 474493 |
UNII | 02XU02QRLX |
ஒத்தசொல்s | நைட்ரசு அமிலம், வளையயெக்சைல் எசுத்தர்; என்-வளையயெக்சைல் நைட்ரைட்டு; வளையயெக்சைல் ஆல்ககால் நைட்ரைட்டு ; C-எக்சைல் நைட்ரைட்டு; O-நைட்ரோசோவளையயெக்சனால் |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C6 |
SMILES | eMolecules & PubChem |
வளையயெக்சைல் நைட்ரைட்டு (Cyclohexyl nitrite) என்பது C6H11NO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.C6H11NO2.[1][2] இது வளையயெக்சனாலும் நைட்ரசு அமிலமும் சேர்ந்த ஓர் எசுத்தராகும். அதாவது இது ஓர் ஆல்க்கைல் நைட்ரைட்டு ஆகும். அமைல் நைட்ரைட்டு மற்றும் பியூட்டைல் நைட்ரைட்டு போல இதுவும் இரத்தநாள விரிவால் ஏற்படும் மார்பு நெரிப்பு நோய்க்கு பயன்படுத்தப்படும் ஓர் ஆஞ்சினா மார்பு வலி மருந்தாகும். வளையயெக்சைல் நைட்ரைட்டு நிறமற்றதாகும். எளிதில் ஆவியாகக்கூடியதுமாகும்.
வளையயெக்சைல் நைட்ரைட்டு ஆவியை உள்ளிழுப்பது தலைவலி மற்றும் ஆபத்தான குறைந்த இரத்த அழுத்த நோய்க்கு வழிவகுக்கும்.
2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வளையயெக்சைல் நைட்ரைட்டு பாப்பர்சு எனப்படும் பொழுதுபோக்கு மருந்தாக விற்கப்பட்டது. பல்வேறு இணைய விற்பனை மையங்கள் பெரும்பாலும் கனடிய வாய்ப்பாடு என்று பெயரிட்டிருந்தன. இம்மருந்து விற்பனையை ஊக்குவிக்க சலுகைகளையும் வழங்கின. இதை உள்ளிழுக்கும் மருந்தாகப் பயன்படுத்தும் போது விளைவுகள் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றன - விந்துதள்ளல் மற்றும் உச்சத்தை தூண்டுதல், குத உடலுறவின் போது தசைகளை தளர்த்துதல் போன்ற பயன்களை கொடுக்கும். எனவே இந்த மருந்து ஓரினச்சேர்க்கையாளர்களை ஈர்க்கிறது. இருப்பினும் வளையயெக்சைல் நைட்ரைட்டு பயனர்கள் மற்ற ஆல்க்கைல் நைட்ரைட்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த மருந்தின் அனுபவம் அவற்றுக்கு நெருக்கமாக இல்லை என்று விவரிக்கின்றனர்.[3]