வள்ளி வரப் போறா | |
---|---|
இயக்கம் | எஸ். வி. சோலை ராஜா |
தயாரிப்பு | எம். பத்மனாபன் எஸ். நிவேதன் |
கதை | எஸ். வி. சோலை ராஜா (வசனம்) |
திரைக்கதை | எஸ். வி. சோலை ராஜா |
இசை | கே. எஸ். மணிஒளி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | எம். வி. கல்யாண் |
படத்தொகுப்பு | எஸ். அஷோக் மேத்தா |
கலையகம் | கிரீன்வேஸ் பிலிம் இண்டர்நேஷனல் |
வெளியீடு | பெப்ரவரி 10, 1995 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வள்ளி வரப் போறா (Valli Vara Pora) 1995இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இதை இயக்கியவர் எஸ். வி. சோலை ராஜா. இதில் பாண்டியராஜன், மோகனா, நிரோஷா முக்கியக் கதாபாத்திரத்திலும், வினு சக்ரவர்த்தி, விஜய லலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, முரளிகுமார், பசி நாராயணன், கரிகாலன், குமரிமுத்து துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். எம். பத்மனாபன், எஸ். நிவேதன் தயாரிப்பில், கே. எஸ். மணிஒளி இசையமைப்பில் இத்திரைப்படம் 1995, பிப்ரவரி 10 அன்று வெளிவந்தது. இப்படம் "மேலபரம்பில் ஆன்வீடு" என்கிற மலையாளப் படத்தின் மறு ஆக்கமாகும். வர்த்தக ரீதியாக இத்திரைப்படம் தோல்வி அடைந்தது.[1][2][3][4]
மீனாட்சி மற்றும் அய்யாசாமி (வெண்ணிற ஆடை மூர்த்தி) தம்பதிக்கு மூன்று மகன்கள்: பெரியபாண்டி, தங்கபாண்டி (சார்லி), சின்னபாண்டி(பாண்டியராஜன்). மூவரும் திருமணமாகாதவர்கள். அக்குடும்பத்தில் சின்னபாண்டி மட்டுமே பட்டதாரி. உறவினரான கவிதா(நிரோஷா), சின்னபாண்டியைக் காதலிக்கிறாள். ஆனால் சின்னபாண்டிக்கு அவள் மேல் விருப்பம் இல்லை. சின்னபாண்டி கேரளாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு வேலை நிமித்தமாகச் செல்கிறான். அங்கு விரைவுத் தபால் பட்டுவாடா செய்யும் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறான். கேரளப் பெண் பவளம், சின்னபாண்டியை காதலிக்கிறாள். ஆனால் அவளது தந்தை மேனனுக்கு (வினு சக்ரவர்த்தி) இதில் விருப்பமில்லை. அவளது விருப்பத்திற்கு மாறாக மணமுடிக்க எண்ணுகிறார். அதனால் சின்னபாண்டியும், பவளமும் அக் கிராமத்தை விட்டு வெளியே போகின்றனர். ஆனால் அந்த கிராமவாசிகளால் பிடிபடுகின்றனர். அந்த கிராமத்தின் தலைவராக இருக்கும் மேனன் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
அன்றே சின்னபாண்டிக்கு தன் சொந்த ஊரில் பணிபுரியும்படி மாற்றல் உத்தரவு வருகிறது. தன் பெற்றோர் இத் திருமணத்தை அனுமதிப்பார்களா என்று பயந்து, பவளத்தை வேலைக்காரியாக தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வீட்டில் அவனது அண்ணன்கள் பெரியபாண்டி மற்றும் தங்கபாண்டி பவளத்தின் மேல் காதல் வயப்படுகின்றனர். அதன் பிறகு என்னவாயிற்று என்பதுடன் கதை முடிவுக்கு வருகிறது.
சின்னபாண்டி - பாண்டியராஜன்
பவழம் - மோகனா
கவிதா - நிரோஷா
மேனன் - வினு சக்ரவர்த்தி
மீனாட்சி - விஜய லலிதா
அய்யாசாமி - வெண்ணிற ஆடை மூர்த்தி
தங்கபாண்டி - சார்லி
பெரியபாண்டி - முரளிகுமார்
நாராயணன் - பசி நாராயணன்
தபால்காரர் - குமரிமுத்து
பவானி பிரசாத்
உஷா நாயர்
திருமண தரகர் - மேனேஜர் சீனா
கரிகாலன்
இடிச்சப்புளி செல்வராசு
சுந்தரம்
அப்பாதுரை
இப்படத்திற்கு இசையமைத்தவர் இசை அமைப்பாளர் கே. எஸ். மணிஒளி. பிறைசூடன் (கவிஞர்), பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், இராமதாசன் இத்திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தனர்.[5]
எண் | பாடல் | பாடியவர்(கள்) | காலம் |
---|---|---|---|
1 | 'அம்மாடி ராத்திரி' | மனோ | 4:50 |
2 | 'தளுக்கு குலுக்கி' | சாகுல் ஹமீது, சுரேஷ் பீட்டர்ஸ் | 3:28 |
3 | 'பொண்ணு ரொம்ப ஜோருதான்' | புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி | 2:56 |
4 | 'ஜிங்கு ஜங்கு' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | 4:49 |
5 | 'ரூட்டுல ஜீட்டுல' | மால்குடி சுபா | 4:02 |
6 | 'தீண்டாமல்' | மால்குடி சுபா | 4:24 |