வழும்பலைவிலங்கு (Gelatinous zooplankton) என்பது நீரில் வாழக்கூடிய வழவழப்பு நிறைந்த உடற்பகுதியைக் கொண்ட உயிரின வகையாகும். இதில் பல குழுக்களைச் சேர்ந்த உயிரிகள் காணப்படுகின்றன. இந்த வகை உயிரினங்களின் பெரும் பிரிவே இதன் உடலில் அமையப் பெற்ற நீரால்தான். பிற உயிரினங்களை ஒப்பிடுகையில் இதன் உடல் மிகுதியான நீரினால் ஆனது. இவ்வகையினுள் உயிரினத் தொகுதியில் காணப்படும் பெருந் தொகுதியில் இடம்பெற்ற உயிர்களும் அதே நேரத்தில் பல வகையான சிறுந் தொகுதியில் இடம்பெற்ற உயிரினங்களும் இடம் பெற்றுள்ளன. இதன் உயிரினப் பட்டியல் காலத்தால் முந்தைய ப்ரோடிசுடுகள் முதல் கார்டேட்டுகள் (தண்டுவடமுள்ள உயிரினங்கள்) வரை இடம் பெற்றுள்ளன.
இப்பிரிவு மென்மையான சதைகளாலான உடலமைப்பைக் கொண்ட நீர்வாழ் விலங்குகளைக் குறிக்கும். இதன் உடலில் இழுவைத் தன்மையும் குழகுழப்புத் தன்மையும் மிகுந்துக் காணப்படும். உடலின் உறுதியற்ற நிலையினால் இவைகளின் உடல்கள் எளிதில் சிதையக்கூடியதாகவும் சேதமடையக்கூடியதாகவும் இருக்கிறது[1]. இதில் அறியப்படும் மெய்யாதெனில் இவ்வொன்றோடுன்று வேறுபட்டிருக்கும் உயிரிகளில் தனித்தனிலையில் அதன் ஒத்த உடற்தோற்றம் அமையப்பெற்றிருப்பது ஒரு வியத்தகு நிகழ்வாகும். இவை நமக்கு வழும்பலை விலங்குகள் திறந்த கடற்பரப்பில் வாழும் உயிரிகளான இவை இயற்கையாக எவ்வாறு உடலமைப்பை பெற்றிருத்தல் வேண்டும் என்கிறது.
அதன வழவழப்பான உடல் தோற்றம் அதன் அடிப்படை வாழியலை ஒட்டி நிலையாகக் காணப்பட்டாலும், அதன் உணவுக்கூறு என்பது ஒரு நிலை இல்லாமலும் உறுதிப்பட கூறவியலாதவையாகவும் உள. இவ்வழும்பலைவிலங்குகள், தன வாழியலுக்கு ஒத்த பல அடிப்படைப் பண்புகளுடன் காணப்படுகின்றன.
இதன் பிரிவுகளில் காணப்படும் உயிரின வகைகள்
வழும்பலை விலங்குகள் உலகின் பெரும்பாலான கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. வெப்பமண்டலம் முதல் துருவப்பகுதிகள் வரைக்காணக்கிடக்கின்றன. அவை குறிப்பிட்டு இவ்விடங்களில் வாழ்வை என வரையரைச் செய்ய இயலாது அனைத்து மட்டங்களிலும் காணக்கிடக்கின்றன. அவைகளில் பெரும்பான்மையா அளவில் பெரியதாகவும் மிருதுவான உடற்தோற்றத்துடனும் காணப்படுகின்றன. கடற்கொந்தளிப்பு இல்லாதா பகுதிகளான கடல் அடியில் இவ்வுயிர்கள் மிகுதியான அளவில் வளருகின்றன. மேலும் இவை திடமான உயிரியாகும் அதாவது எந்த பரப்பிலும் கடல் நிலையிலும் வாழ்த்தகுதியுடையதாய் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக போர்த்துகல் போர்மனிதன் என அழைக்கப்படும் பைசாலியா பைசாலிசு (Physalia physalis), வளி-நீர் இடைமட்டத்தில் வசிப்பவை. இவை சூறைக்காற்றால் இழுத்துச்செல்லப்படுகின்றன. டீனோபோரான நெமியாப்சிசு லெயிடியி (Mnemiopsis leidyi) கொந்தளிப்பு நீரோட்டம் மிகுதியாக உள்ள கழிமுகத்திலும் வாழக்கூடியவை.
பொதுவாக, வழும்பலைவிலங்குகள் அலைவிலங்குகளுக்குள் பொருந்தாது என்று அலைவிலங்கு வல்லுநரகள் மறுப்பதற்கு அவை மாதிரிகள் கொள்ளத்தக்க வடிவில் மிருதுவாகவும் இலகுவாகவும் இருப்பதனால் தான். மிகுதியானவை மிதவைவாழியின் வலைகளில் பட்டு கிழிந்துவிடும், மற்றும் பல ஆழத்தில் வசிப்பவனவாகவும் அவைகளில் சைபனோபோர்கள், டீனோபோர்கள் மிக நுண்மையாக எடுக்கவே முடியாத வடிவில் இலகுவாகவும் கூட்டாக சிதையாமல் எடுப்பதே சிரமமாகும். இவ்வழும்பலை யுயிர்கள் அனைத்து உணவு முறையிலும் ஆக்கிரமித்துள்ளன. அவை அடிப்படை உணவாவதிலிருந்து, மேய்வனவாகவும், ஊனுண்ணிகளாகவும் இருக்கின்றன. இதனுடைய ஆற்றல்மிகு உணவு உட்கொள்ளும் முறை, வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் பெரும்பான்யான அலைவிலங்குகளை புறந்தள்ளுகின்றன. அவைகளில் சில படர்ச்சி நிலையை உண்டுச்செய்து சூழ்நிலையை மாற்றும் வல்லமையும் பெற்றிருக்கிறது. இவ்வழும்பலைவிலங்குகள் அனைத்து மிதவைவாழிகளின் வாழ் உட்பிரிவிலும் காணப்படும் உயிரினங்களாகும்.