பிறப்பு | 1939 பெங்களூர், இந்தியா |
---|---|
குடியுரிமை | இந்தியா |
துறை | மின் தொழில்நுட்பம் |
நிறுவனம் | இந்திய அறிவியல் நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகம் |
Alma mater | வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா இந்திய அறிவியல் நிறுவனம் |
பரிசுகள் | பத்ம பூசண் பத்ம விபூசண் |
வாசுதேவ் கல்கண்டே ஆத்ரே (Vasudev Kalkunte Aatre)(பிறப்பு 1939) ஒரு இந்திய விஞ்ஞானி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) மேனாள் தலைவராவார். டி ஆர் டி ஓ இந்தியாவின் முதன்மை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு. இவர் பாதுகாப்பு அமைச்சரின் (ரக்ஷா மந்திரி ) அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றினார். இவர் பத்ம விபூசண் விருதைப் பெற்றவராவார். [1]
ஆத்ரே 1939இல் பெங்களூரில் பிறந்தார். இவர் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தினை பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரியில் (மைசூர் பல்கலைக்கழகம்) மின் பொறியியல் பிரிவில் பெற்றார். பின்னர் 1961இல் இருந்து மேல்நிலை பட்டத்தினை இந்திய அறிவியல் நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி) பெற்றார். 1963இல்[2] கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். அதன்பிறகு, கனடாவின் ஹாலிஃபாக்ஸில் உள்ள நோவா ஸ்கோடியாவின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பேராசிரியராக 1980 வரை பணியாற்றினார். இவர் 1977 வரை இஅநிறுவனத்தில் வருகை பேராசிரியராக இருந்தார். இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்ப்பாட்டுச் சேவையின் (டிஆர்டிஎஸ்) முன்னாள் உறுப்பினர்.
1980ஆம் ஆண்டில், ஆத்ரே டிஆர்டிஓவின் கொச்சியில் உள்ள கடற்படை இயற்பியல் மற்றும் கடல்சார் ஆய்வகம் (NPOL) பணியில் சேர்ந்தார். பின்னர் 1984ல் இதன் இயக்குநராகப் பணி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 2000ல் டிஆர்டிஓவின் இயக்குநர் ஜெனராலக ஆ. ப.ஜெ. அப்துல் கலாக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். அப்துல் கலாம் அவர்கள் அப்போதைய பாதுகாப்பு மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றினார். அக்டோபர் 2004 இல் ஓய்வு பெற்ற இவருக்குப் பதிலாக முனைவர் எம். நடராஜன் நியமிக்கப்பட்டார்.[3]
2000ஆம் ஆண்டில் ஆத்ரேவிற்குப் பத்ம பூசண் விருதினை அன்றைய குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன் வழங்கினார்.[2] இவருக்கு 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. இவர் இப்போது இந்தியப் பொறியியல் அறிவியல் தொழில்நுடப நிறுவனத்தின் (சிபூர், ஹவுரா) தலைவராக உள்ளார்.[4]
2015ஆம் ஆண்டில், கர்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழுமம் இவருக்கு 2014ஆம் ஆண்டிற்கான கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது.[5]
{{cite web}}
: |last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)