வாகமண் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கோட்டயம் |
ஏற்றம் | 1,100 m (3,600 ft) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | KL-06 |
அண்மைய ரயில் நிலையம் | கோட்டயம் |
வாகமண் என்பது கேரளத்தில் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இவ்வூர் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இவ்வூர் சுற்றுலாத்தலமாகும். இங்கு கேரள அரசின் கால்நடையியல் பல்கலைக்கழகத்தின் கிளை உள்ளது.
தொடுபுழையில் இருந்து 43 கி.மீ தொலைவிலும், பாலையில் இருந்து 37 கி.மீ தொலைவிலும், குமுளியில் இருந்து 45 கி.மீ தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், காஞ்ஞிரப்பள்ளியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், கொச்சியில் இருந்து 102 கி.மீ தொலைவிலும், காஞ்ஞாற்றில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் கொச்சியிலுள்ளது. கோட்டயத்திலுள்ள தொடருந்து நிலையமே அருகிலுள்ள தொடர்வண்டி நிலையமாகும்.