![]() | |
வகை | நிறுவனம் |
---|---|
நிலை | விற்கப்பட்டது |
முந்தியது | விஜயா தயாரிப்பு நிறுவனம், ரோகின் பிக்சர்ஸ் |
நிறுவுகை | 1948 |
நிறுவனர்(கள்) | மூல லட்சுமி நாராயண சுவாமி, மூல வெங்கட ரங்கையா |
தலைமையகம் | வடபழனி, சென்னை, சென்னை மாகாணம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | திரைப்படம் |
வாகினி ஸ்டுடியோஸ் (Vauhini Studios) என்பது இந்தியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இது அக்காலத்தில் தெற்காசியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றிய இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரான மூலா நாராயண சுவாமி என்பவரால் வாகினி ஸ்டுடியோஸ் நிறுவப்பட்டது. பிற்காலத்தில், பொம்மிரெட்டி நாகிரெட்டி இந்த நிறுவனத்தினை வாங்கினார். பின்னர் இதை விஜயா வாகினி ஸ்டுடியோஸ் என விஜயா ஸ்டுடியோவுடன் இணைத்தார்.[1][2][3]