வாக்காப் பாரு
واقف بهارو | |
---|---|
Wakaf Bharu | |
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 6°7′21.8″N 102°12′3.7″E / 6.122722°N 102.201028°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | தும்பாட் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 22.7 km2 (8.8 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2,30,424 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 16250 |
தொலைபேசி எண்கள் | +6-09-7 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
வாக்காப் பாரு (மலாய் மொழி: Wakaf Bharu; ஆங்கிலம்: Wakaf Bharu) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; தும்பாட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 9 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 429 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மலேசியக் கூட்டரசு சாலை -இல் இருந்து 5 கி.மீ. தொலைவில் வாக்காப் பாரு நகரம் உள்ளது. இந்த நகரம் ஓர் அமைதியான கிராமப்புற நகரமாக அறியப்படுகிறது.
இந்த நகரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அதன் பெயர் வாக்காப் பாரு தொடருந்து நிலையம். இந்த நிலையம்வாக்காப் பாரு நகரத்துடன் கிம்மாஸ், குவா மூசாங், தும்பாட் ஆகிய நகரங்களை இணைக்கிறது.
கோத்தா பாரு நகரத்திற்கு தொடருந்து சேவை இல்லாததால், கோத்தா பாருவை நோக்கிச் செல்லும் பயணிகளுக்கு வாக்காப் பாரு தொடருந்து நிலையம் தான் முக்கியமான இறங்கு நிலையமாக விளங்குகிறது.
வாக்காப் பாரு பகுதியில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் மலாய்க்காரர்கள் மற்றும் முசுலிம்கள். ஒவ்வொரு வாரமும் "வெள்ளிக்கிழமை சந்தை" என்று அழைக்கப்படும் சந்தை இருப்பதால், வாக்காப் பாரு நகரம் வெள்ளிக்கிழமைகளில் கூட்டமாக இருக்கும்.[1]