வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) என்பது வாக்குச்சீட்டு இன்றி வாக்களிக்கும் அமைப்பில் வாக்காளர்கள் தாங்களாகவே, தங்களால் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை சரிபார்க்கும் முறையாகும். வாக்குப்பதிவு செய்யப்பட்ட பின்பு சரிபார்க்கப்பட்ட காகித ஆவணம் அருகிலுள்ள கண்ணாடிப்பெட்டியில் விழுமாறு இருக்கும். இதன்மூலம் மின்னணு தேர்தல் கருவியில் ஏற்படும் செயலிழப்புகள், முறைகேடுகள் மற்றும் சேமிக்கப்பட்ட மின்னணு தேர்தல் முடிவுகளை தணிக்கை செய்ய ஏதுவாகிறது.
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை முதலில் செப்டம்பர் 2013-ல் நாகலாந்து மாநிலத் தேர்தலில் நொக்சன் (சட்டமன்றத் தொகுதி)யில் பயன்படுத்தப்பட்டது.[1][2]
இந்திய பொதுத் தேர்தலில் ஒரு முன்னோடி திட்டமாக 2014 பொதுத்தேர்தலில் மொத்தமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளில் 8 தொகுதிகளில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை ( VVPAT ) முறைமை அறிமுகப்படுத்தபட்டது.[3]. அவை லக்னோ, காந்திநகர், பெங்களூரு தெற்கு, மத்தியசென்னை, ஜாதவ்பூர், ராய்ப்பூர், பாட்னா சாஹிப் மற்றும் மிசோரம் தொகுதிகளில் செயல்படுத்தப்பட்டது.[4][5][6][7][8][9]