வாசிங்டன் சுந்தர்

வாசிங்டன் சுந்தர்
வாசிங்டன் சுந்தர் 2019–20 விஜய் அசாரே கோப்பை போட்டியின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு5 அக்டோபர் 1999 (1999-10-05) (அகவை 25)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டப்பெயர்வாசி[1]
மட்டையாட்ட நடைஇடது கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலது கை சுழற்பந்துவீச்சாளர்
பங்குபன்முக வீரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 301)15 சனவரி 2021 எ. ஆத்திரேலியா
ஒரே ஒநாப (தொப்பி 220)13 திசம்பர் 2017 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்55
இ20ப அறிமுகம் (தொப்பி 72)24 திசம்பர் 2017 எ. இலங்கை
கடைசி இ20ப6 திசம்பர் 2020 எ. ஆத்திரேலியா
இ20ப சட்டை எண்55
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2016/17–தற்போதுவரைதமிழ்நாடு
2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 555)
2018–தற்போதுவரைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (squad no. 555)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுகள் ஒபது பஇ20 முதது
ஆட்டங்கள் 1 1 21 12
ஓட்டங்கள் 84 26 532
மட்டையாட்ட சராசரி 42.00 8.66 31.29
100கள்/50கள் 0/1 –/– -/- 1/2
அதியுயர் ஓட்டம் 62 14* 159
வீசிய பந்துகள் 294 60 426 1740
வீழ்த்தல்கள் 4 1 18 30
பந்துவீச்சு சராசரி 42.25 65.00 26.83 26.93
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a 1
சிறந்த பந்துவீச்சு 3/89 1/65 3/22 6/87
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/– 6/- 8/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 19 சனவரி 2021

வாசிங்டன் சுந்தர்(Washington Sundar, பிறப்பு அக்டோபர் 5, 1999) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை மட்டையாளரும், வலதுகை சுழற்பந்து வீச்சாளரும்[2][3] ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார் [4]. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை ரஞ்சிக்கோப்பைக்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6, 2016-ல் துவங்கினார்.[5] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 13, 2017 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[6] மேலும் அதே அணிக்கு எதிராக டிசம்பர் 24, 2017 இல் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 ஐபிஎல் அணியான ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட் அணியில் ரவிச்சந்திரன் அசுவினுக்கு மாற்றாகத் தேர்வானார்.

விளையாடிய அணிகள்

[தொகு]

இந்தியத் துடுப்பாட்ட அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு, பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி.

உள்ளூர் போட்டிகள்

[தொகு]

அக்டோபர் 6, 2016 [7] இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இவர் தமிழ்நாடு அணிக்காக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடினார். ரவிச்சந்திரன் அசுவினிற்குப் பிறகு வலது கை சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தில் இருந்து இரண்டாவது வீரராக இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு தேர்வானார். அக்டோபர், 2017 இல் தனது முதல் தர துடுப்பாட்டத்தில் முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 2017 - 2018 ரஞ்சிக் கோப்பை [8] போட்டியில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை அடித்தார். 2016 ஆம் ஆண்டின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வானார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

நவம்பர், 2017 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடுவதற்கான இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடுவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.[9] அதனைத் தொடர்ந்து இதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி அணியிலும் இவர் இடம்பெற்றார். கேதார் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[10] இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 13, 2017 ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[11] இவரின் முதன்முறையாக லகிரு திரிமான்னாவினை வீழ்த்தினார்.

மேலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக டிசம்பர் 24, 2017 இல் முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.[12] மிக இளவயதில் இந்திய அணிக்காகப் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் போட்டியின் போது இவரின் வயது பதினெட்டு ஆண்டுகள் 80 நாள்களாக இருந்தது.[13]

மார்ச் 2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிரான 2018 நிதாகஸ் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். பவர்பிளேயில் சிக்கனமாக பந்துவீசினார். ஓவர்களுக்கு 6 ஓட்டங்களுக்கும் குறைவாகவே விட்டுக் கொடுத்துள்ளார். ஓட்டங்கள் எதுவும் விட்டுக்கொடுக்காமல் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். மிக இளம்வயது வீரர் ஒருவரின் சாதனையாக இது கருதப்படுகிறது. இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.

உசாத்துணைகள்

[தொகு]
  1. "Father, coaches played big role in my career: Washington". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/cricket/sri-lanka-in-india/father-coaches-played-big-role-in-my-career-washington/articleshow/61929905.cms. பார்த்த நாள்: 3 February 2020. 
  2. K Chakraborty (6 November 2015). "Tamil Nadu teen makes India U-19 cut - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  3. "Washington Sundar". Espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  4. "தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு". Times of India. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Ranji Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Rohtak, Oct 6-9, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  6. "2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017". ESPN Cricinfo. 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  7. "Ranji Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Rohtak, Oct 6-9, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
  8. "Washington Sundar's 156* underpins TN's dominance". ESPN Cricinfo. 15 October 2017. http://www.espncricinfo.com/series/8050/report/1118631/day/2/. பார்த்த நாள்: 15 October 2017. 
  9. "Washington Hooda in India's T20 squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  10. "Washington Sundar replaces injured Jadhav in ODI squad". ESPN Cricinfo. 9 December 2017. பார்க்கப்பட்ட நாள் 9 December 2017.
  11. "2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017". ESPN Cricinfo. 13 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  12. "3rd T20I (N), Sri Lanka tour of India at Mumbai, Dec 24 2017". ESPN Cricinfo. 24 December 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2017.
  13. "Washington Sundar youngest to play for India in T20Is". Times of India. பார்க்கப்பட்ட நாள் 24 December 2017.