வாசுதேவன் சிறீனிவாசு Vasudevan Srinivas | |
---|---|
![]() 2009 ஆம் ஆண்டில் சிறீனிவாசு | |
பிறப்பு | 6 சூன் 1958 |
தேசியம் | இந்தியா |
துறை | இயற்கணித வடிவவியல் கணிதம் |
பணியிடங்கள் | டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெங்களூர்ப் பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | சிபென்சர் இயானே பிளாச்சு |
முனைவர் பட்ட மாணவர்கள் | அமலேந்து கிருட்டிணா |
விருதுகள் | சாந்தி சுவரூப் பட்நாகர் விருது (2003) |
வாசுதேவன் சிறீனிவாசு (Vasudevan Srinivas) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளராவார். 1958 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 அன்று இவர் பிறந்தார். இயற்கணித வடிவவியலில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிதப் பள்ளியில் மூத்த பேராசிரியராக பணிபுரிகிறார்.[1]
சிறீனிவாசு பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டமும் சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் 1978 ஆம் ஆண்டில் முதுநிலை அறிவியல் மற்றும் 1982 ஆம் ஆண்டில் முனைவர் பட்டங்களையும் பெற்றார். அமெரிக்க கணிதவியலாளர் சிபென்சர் பிளாச்சு வாசுதேவன் சீறீனிவாசுவின் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு மேற்பார்வையாளராக இருந்தார். வாசுதேவன் 1983 ஆம் ஆண்டு முதல் மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி கற்பித்தல் வாழ்க்கையை வருகைதரும் பேராசிரியராகத் தொடங்கினார்.
முக்கியமாக இயற்கணித வடிவவியலில் ஒற்றை இயற்கணித வகை சுழற்சிகளை ஆய்வு செய்வதில் சீறீனிவாசு நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். பரிமாற்று இயற்கணித இடைமுகத்தின் திட்டவட்டமான தொகுதிகள், வகுப்பி வர்க்கக் குழுக்கள், தனித்துவமான காரணிமயமாக்கல் களங்கள் மற்றும் இல்பர்ட்டு செயல்பாடுகள் மற்றும் பெருக்கம் தொடர்பான ஆய்வுகளையும் இவர் மேற்கொண்டார்.
கணித அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது 2003 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.[2]