வாடியா இமயமலை நிலவியல் நிறுவனம்

வாடியா இமயமலை நிலவியல் ஆய்வு நிறுவனம்
நிறுவனத்தின் முக்கிய நுழைவாயில்
முந்தைய பெயர்கள்
இமயமலை நிலவியல் ஆய்வு நிறுவனம்
வகைஇயற்கை வளங்கள் ஆய்வு நிறுவனம்
உருவாக்கம்1968
பணிப்பாளர்டாக்டர். கலாசந்த் செயின்
அமைவிடம், ,
30°19′42″N 78°00′47″E / 30.32833°N 78.01306°E / 30.32833; 78.01306
வளாகம்நகர்புறம்
இணையதளம்https://www.wihg.res.in/

வாடியா இமயமலை நிலவியல் ஆய்வு நிறுவனம் (Wadia Institute of Himalayan Geology), இந்தியாவின் இமயமலையில் காணப்படும் இயற்கை வளங்கள் குறித்து ஆய்வு செய்யும் தன்னாட்சி பெற்ற இந்திய அரசின் நிறுவனம் ஆகும். புகழ்பெற்ற இமயமலை நிலவியல் ஆய்வாளாரான தாராஷா நோஷெர்வான் வாடியா பெயரில் இந்நிறுவனத்திற்கு வாடியா இமயமலை நிலவியல் நிறுவனம் எனப்பெயரிடப்பட்டது. இந்நிறுவனம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வாடியா இமயமலை நிலவியல் ஆய்வு நிறுவனம் இயங்குகிறது.[1] இதன் பணி இமயமலையின் நிலவியலை ஆய்வு செய்து இயற்கை வளங்களை தேடுவதாகும். சூன் 1968ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையின் கீழ் நிறுவப்பட்ட இந்நிறுவனம், பின்னர் ஏப்ரல் 1976ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் தேராதூன் நகரத்திற்கு மாற்றப்பட்டது.[2][3]

இந்நிறுவனம் இமயமலைப் பகுதிகளில் மூன்று கள ஆய்வு மையங்கள் கொண்டுள்ளது. அவைகள் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் தர்மசாலா, உத்தரகாண்ட் மாநிலத்தின் டோக்ரியானி கொடுமுடி மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மாநிலததில் இட்டாநகர், ஆகும்[4]

பனிக் கொடுமுடிவியல் மையம்

[தொகு]

கரியமிலவாயு உமிழ்வு, பருவ நிலை மாற்றத்தால் பனிக்கொடுமுடிகள் உருகி வெள்ளம் ஏற்படுவதை ஆய்வு செய்வதற்கு, இந்நிறுவனம் இமயமலையின் பனிக்கொடுமுடி ஆய்வு செய்தவதற்கு 4 சூலை 2009 அன்று கொடுமுடிவியல் மையம் நிறுவியது. [5]

மாணவர் திட்டங்கள்/ஆய்வு உதவித்தொகை

[தொகு]
  • ஆய்வு உதவித்தொகைகள்
    • நிறுவனத்தின் ஆய்வு உதவித்தொகைகள்:

ஆண்டுதோறும் இந்நிறுவனம் இரு வகைகளில் ஆய்வு உதவித்தொகைகள் வழங்குகிறது: a) இளையோர் ஆய்வு உதவித்தொகை b) நிறுவன ஆய்வு உதவியாளர்

    • திட்ட ஆய்வு உதவித் தொகை

ஆலோசனை மற்றும் ஆலோசனை சேவைகள்

[தொகு]

மலைப்பாங்கான பகுதிகளில் சாலை அமைத்தல், பாலம் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் இடத்தை தேர்வு செய்தல், நிலச்சரிவு, ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்தல், புனல் மின் நிலையங்கள் அமைக்க இடத்தை தேர்வு செய்தல், ரோப் வழித்தடம் அமைக்க இடத்தை தேர்வு செய்தல் போன்ற பணிகளில் இந்நிறுவனம் ஆலோசனை மற்றும் ஆலோசனை சேவைகள் அரசுக்கும், தனியாருக்கும் சேவைகள் வழங்குகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Global Warming has no impact on Himalayas claims Wadia Director". Hindustan Times. 6 March 2010. Archived from the original on 11 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-07-03.
  2. "History | Wadia Institute of Himalayan Geology, Dehradun, Uttarakhand (INDIA)..." wihg.res.in. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-12.
  3. "Wadia Institute of Himalayan Geology, Dehradun". Department of Science and Technology, Govt. of India. பார்க்கப்பட்ட நாள் 2014-07-03.
  4. "Wadia Institute of Himalayan Geology Dehradun". euttaranchal. பார்க்கப்பட்ட நாள் 2014-07-03.
  5. "Center For Glaciology | Wadia Institute of Himalayan Geology, Dehradun, Uttarakhand (INDIA)..." wihg.res.in. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-07-12.

வெளி இணைப்புகள்

[தொகு]