வாட்டு கோபீசு Watu Kobese | |
---|---|
![]() | |
நாடு | ![]() |
பிறப்பு | 27 சூன் 1973 |
பட்டம் | அனைத்துலக மாசுட்டர் (1995) |
உச்சத் தரவுகோள் | 2419 (சனவரி 2005) |
வாட்டு கோபீசு (Watu Kobese) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு சதுரங்க அனைத்துலக மாசுட்டர் ஆவார். இவர் 1973 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் நாள் பிறந்தார். பிடே எனப்படும் பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் பயிற்சியாளராகவும் 2005 ஆம் ஆண்டில் இவர் பணியாற்றியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் தென்னாப்பிரிக்கர்களுக்கு மட்டுமான சாம்பியன் பட்டப் போட்டியில் 1998, 2003 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை பட்டம் வென்றுள்ளார். அனைவரும் பங்கேற்கும் தென்னாப்பிரிக்க சதுரங்க சாம்பியன் பட்ட்த்தை 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை வென்றுள்ளார். கோபீசுக்கு பிடே அமைப்பு 1995 ஆம் ஆண்டில் பிடே அனைத்துலக மாசுட்டர் (ஐஎம்) பட்டம் வழங்கி சிறப்பித்தது. சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் சார்பாக இவர் 1992, 1994, 1996, 1998, 2004, 2006, 2008, 2010, 2012, 2014, 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இவர் பங்கேற்றார் [1].
சோசா மொழியில் இவர் எழுதிய மாசிடாலே உதிம்பா என்ற ஒரு சதுரங்க புத்தகம் சூலை 2015 ஆண்டு வெளியிடப்பட்டது. இப்புத்தகம் சுலு மொழியில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பாகும் [2][3].