வாணி விலாச சாகரா | |
---|---|
வாணி விலாச சாகரா, சித்திரதுர்க்கா மாவட்டம், கருநாடகம் | |
அமைவிடம் | சித்திரதுர்க்கா மாவட்டம், கருநாடகம் |
புவியியல் ஆள்கூற்று | 13°53′26″N 76°28′37″E / 13.89056°N 76.47694°E |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | வேதவதி ஆறு |
வாணி விலாச சாகரா அல்லது மரி கனிவே (ஆங்கில மொழி: Vani Vilasa Sagara) என அழைக்கப்படும் இந்த அணையானது இந்தியாவின் கருநாடக மாநில சித்ரதுர்கா மாவட்டத்தின் ஹிரியூர் தாலுகாவில் அமைந்துள்ளது. ஹிரியூரிலிருந்து தென் மேற்கில் 20 கிமீ தொலைவிலும், ஹொசதுர்காவிலிருந்து வட மேற்கில் 32 கிமீ தொலைவிலும், ஹொலல்கெரேவிலிருந்து தென் கிழக்கில் 58 கிமீ தொலைவில், ஹுளியாருவிலிருந்து வடக்கே 50 கிமீ தொலைவிலும், சித்ரதுர்காவிலிருந்து தெற்கே 60 கிமீ தொலைவிலும், பெங்களூருவிலிருந்து வட மேற்கே 180 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த அணை இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னர் வேதவதி ஆற்றின் குறுக்கே மைசூர் மகாராஜாவால் கட்டப்பட்டதாகும். மாநிலத்திலேயே மிகவும் பழமையான அணை இதுவாகும்.[1]