பொது மருத்துவமனை | |
---|---|
வலைத்தளம் | [www.bmcri.org/vanivilas_hosp.html {{{Name}}}] |
வாணிவிலாஸ் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை (Vanivilas Women and Children Hospital) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூரில் அரசு நடத்தும் மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]
இந்த மருத்துவமனை ₹ 4 இலட்சம் செலவில், 1935இல் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனையின் முதல் கண்காணிப்பாளர் எம்.சி. அல்புகெர்கி ஆவார்.[2] இந்த மருத்துவமனை ₹ 4.2 கோடி செலவில் 2002ஆம் ஆண்டு பராமரிப்புச் செய்யப்பட்டது.
2000ஆம் ஆண்டில், இந்தியாவின் 11 எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாகவும், கர்நாடகாவின் ஒரே மையமாகவும் இந்த மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது.[3]
வாணி மருத்துவமனைக்கு முன்பாக இங்கு, கோட்டை தேவாலயமும் கோட்டை கல்லறையும் இந்த மைதானத்தில் இருந்தன. மைசூர் அரசாங்கத்தால் இங்கிலாந்தின் திருச்சபையிடமிருந்து இந்த நிலத்தைக் கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடாக சாமராஜ்பேட்டையின் ஹார்டிங் சாலையில் நிலம் வழங்கப்பட்டது. இப்போது இங்கு புனித லூக்கா தேவாலயம் உள்ளது.[4][5][6]
இந்தியத் திரைப்பட உச்ச நட்சத்திரம் இரசினிகாந்த் இந்த மருத்துவமனையில் திசம்பர் 12, 1950 அன்று பிறந்தார்.[7]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite book}}
: Check date values in: |archivedate=
(help)