வாண்டட் | |
---|---|
இயக்கம் | முரளி நாகவல்லி |
தயாரிப்பு | ஏ.ஜெயன் |
கதை | பிரிதர்ஷன் (திரைக்கதை வசனம்) |
இசை | தீபக் சட்டர்ஜி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஓம் பிரகாஷ் |
படத்தொகுப்பு | என்.கோபாலகிருஷ்ணன் |
கலையகம் | அபர்ணா பிலிம்ஸ் |
வெளியீடு | 17 ஜூலை 2004 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
வாண்டட் என்பது 2004 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி திரில்லர் திரைப்படம் ஆகும். இப்படத்தை புதுமுகம் முரளி நாகவல்லி இயக்கியுள்ளார். பிரியதர்ஷன் கதை வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் மது வாரியார், அரவிந்தன், அன்னியப்பன், நிஷாந்த் சாகர், சுசித்ரா ஆகிய ஐந்து புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஐதே (2003) என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1]
ஐந்து வேலையில்லாத இளைஞர்கள் ஒரு திருட்டைத் திட்டமிடுகிறார்கள். டான் முகமது இப்ராகிம் இளைஞர்கள் இருக்கும் நகரத்திற்கு வருகிறார். நாராயண ஸ்வாமி ஐபிஎஸ் எப்படி இளைஞர்களை நீதியின் முன் கொண்டு வருகிறார்? என்பது கதையின் மீதிப் பகுதியாகும்.[2]
பிரியதர்ஷனிடம் உதவியாளராகப் பணியாற்றிய முரளி நாகவல்லி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[3] புதுமுகங்கள் மது வாரியர், நிஷாந்த் சாகர், அரவிந்த், அன்னியப்பன், சுசிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாகவல்லி இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நடிப்பேன் என்று உறுதியளித்த மோகன்லால், போலீஸ் அதிகாரியாக தோன்றினார்.[5]
கேரளாவில் வளர்ந்து வரும் நடுத்தர மக்களின் நலன்களை கணக்கில் கொண்டு எடுத்த படம்.[1]
தீபக் சட்டர்ஜியின் இசை மற்றும் கிரீஷ் புத்தஞ்சேரியின் பாடல் வரிகள்.
மோகன்லாலின் கௌரவ தோற்றம் காரணமாக இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.[6] இப்படம் மயிலாட்டம் மற்றும் காக்ககரும்பன் ஆகிய படங்களுடன் வெளியானது.[6]
சிஃபி படத்திற்கு "நன்று" என்ற விமரிசனத்தை வழங்கியதுடன், "இயக்குனர் முரளி இப்படத்தை ஒரு ஹாலிவுட் த்ரில்லர் போல உருவாக்கியிருக்கிறார். அவரால் நான்கு இளம் நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெற முடிந்தது. மது வாரியர் வளர்ந்துவருவார். மீரா ஜாஸ்மின் நம்பிக்கை தருகிறார். சுசிதாவை பிடிக்கும். அன்னியப்பன் நகைச்சுவைக் காட்சிகளில் நிறைவு செய்துள்ளார்".[2]